அடிமைகளின் அம்மா!




Image result for web du bois



அடிமைகளின் அம்மா!

வரலாற்றில் மால்கம் எக்ஸின் அம்மா என்றழைக்கப்படுபவர், அவர் இறந்தபிறகு ஆற்றிய புகழ்பெற்ற உரையின் பெயர் இது முடிவல்ல தொடக்கம். கிரஹாம் டியூபோய்ஸ்(1896-1977) இந்தியானாவில் பிறந்தார். 1896 ஆம் ஆண்டு பிறந்தார். மதபோதகரின் மகளாக கல்வி கற்ற கிரஹாம் டியூபோய்ஸ், 1932 ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களின் பங்களிப்பில் ஓபராவை நடத்தி பிரபலமானார். பல்வேறு கருப்பின சாதனையாளர்களின் வரலாற்றையும் எழுதிய ஷிர்லி, இரு குழந்தைகளின் தாயாக விவகாரத்து பெற்று நியூயார்க்கில் பணிபுரிந்துவந்தார்.


1951 ஆம் ஆண்டு W.E.B டியூ போய்ஸ் என்ற குடியுரிமைக்கான போராளியை மணம்செய்தார். அப்போது டியூ போய்ஸிற்கு வயது 80. பொருளாதார பாதுகாப்பிற்கான திருமணம் என்றாலும் இருவரின் பங்களிப்பில் கருப்பினத்தவர்களுக்கான போராட்டம் தீவிரம் கொண்டது. நாடு முழுக்க கருப்பினத்தவர்களுக்காக போராடினாலும் வரலாற்றில் ஷிர்லிக்கு இடம் கிடைக்காததற்கு காரணம், அவர் மரபான பெண்ணாக நடந்துகொண்டதாலும், டியூ போய்ஸ் இவரின் வசீகரத்தை தன் வசம் எடுத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. கானா டிவி, ப்ரீடம்வேய்ஸ் எனும் ஊடகங்களை கருப்பினத்தவர்களுக்கான தொடங்கிய பெண் ஆளுமை கிரஹாம் டியூபோய்ஸ்.

2

சிரிச்சா சூப்பர்!

சிரிப்பு எளிமையாக தோன்றினாலும் சமூகத்தை இணக்கமாக்குவதில் காமெடிக்கு இணை ஏதுமில்லை. தனியாக டிவியில் வடிவேலு காமெடி பார்த்து சிரிப்பதை விட குழுவாக இருக்கும்போது சிரிப்பின் டெசிபல் அதிகம். "சிரிப்பு என்பது பிற மனிதர்களை எளிதில் அணுகலாம் என்பதற்கான சிக்னல் எனலாம். " என்கிறது 2010 ஆம் ஆண்டு மாற்றுமருத்துவத்திற்கான பிஎம்சி ஆய்வு.

ரத்த அழுத்தத்தை குறைத்து மன அழுத்தத்திற்கு டாட்டா சொல்வதில் சிரிப்பின் பங்குள்ளது என்பதோடு இதயநோய், வாதம் ஆகியவை தோன்றுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது என்கிறது 2017 ஆம் ஆண்டு டென்ட்டல் மெடிக்கல் பத்திரிகை ஆய்வுக்கட்டுரை.

மனப்பதற்றத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருமளவு தூண்டுவதாக சைக்காலஜி ரிப்போர்ட் எனும் இதழில் ஆய்வுக்கட்டுரை சொல்லும் தகவல்களோடு நிம்மதி பரவும் மனதும், முகமும் உங்களுக்கே குட்மார்னிங் சொல்லுமே. மேலும் மூச்சும், இதய அமைப்புகளும் ரிலாக்ஸாகி இயங்குவதையும் இன்டர்நேஷனல் ஹியூமர் என்ற அமைப்பும் உறுதி செய்துள்ளது. சிரிப்பு உடல் இறுக்கத்தை மட்டுமல்ல, மனதையும் கட்டற்றதாக்கி மெல்லிய இறகு போன்றதாக்கும். ஸ்மைல் ப்ளீஸ் மக்களே!