மெர்சிடிஸ் கார் ஓடத்தொடங்கியது இப்படித்தான்!
மெர்சிடிஸ் பெண்!
பெர்த்தா, தன் இருமகன்களோடு
தன் கணவருக்கு கூட சொல்லாமல் அவரின் கண்டுபிடிப்பில் உருவான காருடன் தன் அம்மா வீட்டிற்குச்
சென்றார். கணவர் கார்ல் பென்ஸின் கூட்டாளியினால் ஆட்டோஷாப் ஏலத்திற்கு
வந்தது. கையிலிருந்த சிறுபகுதி நிலம், மனைவியின்
ஆதரவும் இல்லாதிருந்தால் பென்ஸ் கார் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது. 1849 ஆம் ஆண்டு பிறந்த பெர்த்தா, இயற்கை அறிவியலில் ஆர்வம்
கொண்டவர்.
காதல் கணவரின்
கார் கனவை உருவாக்க,
தன் பெற்றோரிடமிருந்து பணம் பெற்றுக்கொடுத்தார் பெர்த்தா. காரை தயாரித்தாலும் அதிக தொலைவு ஓட்டுவதில் கார்லுக்கு நம்பிக்கையில்லை. மன்ஹெய்ம் டு ஃபோர்ஸெய்ம் என்ற தன் அம்மாவின் வீட்டுக்கு காரில் சென்று கணவரின்
திறனை உலகிற்கு நிரூபித்தார் பெர்த்தா.இதன் பின்னரே கார்ல் பென்ஸ்,
25 கார்களை 1-3 ஹார்ஸ் பவரில் தயாரித்து புகழ்பெற்றார்.