உலகில் அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும்!

 







மில்லியன் வோல்ட் மின்சாரம்!

உலகிலேயே அதிகளவு மின்சாரத்தை எங்கு தயாரிக்கலாம்? நீரில், காற்றில், சூரிய ஒளி  என்கிறீர்களா?. இப்பதில்களை ரப்பர் கொண்டு அழியுங்கள். மின்னல் மூலம்தான் அதிகளவு மின்சாரத்தை நாம் பெற முடியும். 

ஜேம்ஸ் ஃபிராங்கிளினுக்கும் கூட இது தெரியும். ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை மின்னலிலிருந்து பெறும் ஆற்றலை அளவிட முயற்சித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக சென்சார்களை வைத்து முயன்றும் கூட மின்னல்களை சரியான முறையில் கவனிக்க முடியவில்லை. 

ஊட்டியில் ஆராய்ச்சியாளர்கள் செய்த புதிய ஆய்வு குறித்த செய்தி பிஸிகல் ரிவ்யூ லெட்டர்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு டிச.1 அன்று ஊட்டியில் நடந்த இடிமின்னல்கள் அளவிடப்பட்டன. பதினெட்டு நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் 1.3 ஜிகாவோல்ட்ஸ் மின்சாரம் கடத்தப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை விட பத்து மடங்கு அதிக அளவு ஆகும். 

”இதையொட்டியே மழைமேகங்கள் ஆபத்தானவை என்கிறோம். இதில் வெளிப்படும் வெப்பத்தை நீங்கள் எதில் வெளியேற்றினாலும் அது பேரழிவாக மாறும் ” என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி எழுத்தாளர் சுனில் குப்தா.  

குப்தா மற்றும் அவரது குழுவினர், இந்த மின் பரிமாற்றத்தில் பங்காற்றும் மியான் துகள்களைப் பற்றி ஆராய்ந்தனர். மியான் என்பது எலக்ட்ரானை ஒத்த அணுத்துகள். மழைமேகங்களிலிருந்து நீர் மூலம் நிலத்திற்கு மியான் துகள்கள் வருகின்றன. இவை கடலுக்குள் பயணிக்கிறது. கூடவே நொடிநேரத்தில் அளவிட முடியாத ஆற்றலையும் கொண்டுவருகிறது. ஆனால் இதெல்லாம் அதன் பாதையில் எந்த பொருட்களும் இல்லாதபோதுதான். 

2018 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கிஸா பிரமிடில் ஆராய்ச்சி செய்தனர். இங்கு மியான் டிடெக்டர்களை அமைத்து அத்துகள்களைக் கண்டறிய முயற்சித்தனர். இதன் மூலம், மியான் வெற்றிடத்தில் கடந்து செல்வதை விட பிரமிட் கற்களின் மீது ஊடுருவிச் செல்லும்போது அதிக ஆற்றல் இழப்பாகிறது. இதை முன்மாதிரியாக வைத்து குப்தா குழு, ஊட்டியின் மழைமேகங்களிலுள்ள மின்சாரத்தை அளவிட்டனர்.  1920 ஆம் ஆண்டு மழைமேகங்களில் ஜிகாவோல்ட் அளவு மின்சாரம் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னரே கண்டறிந்தாலும் அது நிரூபிக்கப்படவில்லை. 

மழைமேகங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக, மணிக்கு 40 மைல் தொலைவில் , 146 சதுர மைல் தொலைவில் பயணிப்பது தெரிய வந்துள்ளது. இம்மேகங்கள் தோன்றி ஆறு நிமிடங்களில் மின்சாரத்தை வெளிப்படத் தொடங்கியதைக் கண்டறிந்துள்ளனர். இங்கு கிடைக்கும் மின்சாரத்தை சேமித்தால் நியூயார்க் நகரத்திற்கு 26 நிமிடங்களுக்கு மின்சாரம் வழங்க முடியும். அதேசமயம் மழைமேகங்கள் கூடும் சமயங்களில் காஸ்மிக் கதிர்களின் அடர்த்தி அதிகரிப்பதன் காரணம் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகின்றனர். எனவே, மழைமேகங்கள் வானில் இருக்கும்போது பட்டம் விடுவதைத் தவிருங்கள். 


கருத்துகள்