சோலோ டேட்டிங் தான் ஈஸி!
சோலோ டேட் போகலாமா?
இன்று ஒரு டூர் போக ஆபீசில் திட்டமிடுகிறார்கள் என்றால் என்ன பிரச்னை முன்னே வந்து நிற்கும்? அவன் வந்தால் நான் வரமாட்டேன். அவன் வரலைனா நான் வரமாட்டேன். இப்படி எல்லாம் ஆபீஸ் ஊழியர்கள் வம்பு அரசியல் செய்வார்கள். ஆனால் யாருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போக இத்தனை அரசியல்களை, வம்புகளை சமாளித்து போக பிடிக்குமா? எனவே, நீங்கள் வரவே வேண்டாம் நானே போய்க்கொள்கிறேன் என பலரும் தனியாகவே போகிறார்கள். ஜாலியாக சூழலை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சியாக நினைத்ததை செய்கிறார்கள். இதில் நாம் டூர் என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். ஆனால் சோலோ டேட் என்பது என்ன? அதுவும் நினைத்த லட்சியமான சுற்றுலா தலத்திற்கு போவதுதான்.ஆனால் காதலர், காதலி இருந்தாலும் கூட தனியாகவே போவதுதான் விஷயம்.
இன்று தனியாக வாழ்பவர்கள் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு நண்பர்கள், காதலர், காதலி, அலுவலக ஆட்கள் என யாரும் இல்லாமல் தனியாகவே செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதைப்பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடத் தொடங்கியிருக்கின்றனர். எனவே, இந்த டிரெண்ட் இப்போது அதிகளவு பரவலாகத் தொடங்கியிருக்கிறது.
இந்திய சமூகத்தில் ஆணோ, பெண்ணோ தனியாக இருந்தால் அதுவும் பொது இடத்தில் பலரும் ஏதோ பிரச்னை என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்று நிரூபணம் செய்வது தனியாக இருப்பவர்களின் பிரச்னையாகி விடுகிறது. பெங்களூருவைச்சேர்ந்த மார்க்கெட்டிங் மேனேஜர் அனிதா ஜோடி. இவர், ஆபீசில் தனது வேலையை முடித்துவிட்டு அருகிலிருந்த கஃபேயில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்க, அங்கு வந்த ஆபீஸ் ஆட்கள் ஏதோ துக்கம் விசாரிப்பது போல அனிதாவை விசாரித்திருக்கின்றனர். தனியாக உட்கார்ந்திருக்கிறாரே என்று.... இதில் இன்னும் மோசமான நிலை, கஃபேயில் உள்ளவர்கள் ஜோடியாக வரவேண்டியவர் ஏன் தனியாக உட்கார்ந்திருக்கிறார் என சிம்பதி பார்வை பார்த்ததுதான் கொடுமை.
நான் சிலசமயம் வீக் எண்டில் நண்பர்களுடன் விளையாட திட்டமிடுவேன். அப்போது பார்த்து சில நண்பர்கள் வருவேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில் வரமுடியாது என தகவல் சொல்லுவார்கள். அப்போது நான் கவலைப்படாமல் திட்டமிட்டபடி விளையாட போய்விடுவேன். இப்படித்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதும் கூட. அதுவே எனக்கு பழகிவிட்டது. நன்றாகவும் இருக்கிறது. அப்புறமென்ன என்றார் மும்பை வழக்குரைஞர் சத்யஜித்.
நம்மை நாமே ரசித்து பார்க்க சோலோ டேட் உதவும். எனவே இடங்களுக்கு தனியாக போவது ஒன்றும் பிரச்னையில்லை என்கிறார்கள் இளைஞர்கள். இந்த டிரெண்ட் இன்று பேசப்பட்டாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா
கேடகி தேசாய்
கருத்துகள்
கருத்துரையிடுக