கொல்லப்பட்ட முஸ்லீம்கள், சீக்கியர்கள், வல்லுறவு செய்யப்பட்ட காஷ்மீர் பெண்கள் பற்றியும் பேசலாமே? - பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்

 






பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்








பரூக் அப்துல்லா
முன்னாள் முதல் அமைச்சர், காஷ்மீர்


விவேக் அக்னிஹோத்ரி என்ற இயக்குநர் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்தை எடுத்துள்ளார். படம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் எடுத்துக்கொண்ட கதை தீவிரமானது. காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் எப்படி  விரட்டப்பட்டனர் என்பதை படத்தில் காட்டியிருந்தனர். குறிப்பாக, முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவையும் மோசமாக சித்திரித்திருந்தனர். இதைப்பற்றி அவரிடம் பேசினோம். 

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பற்றி என நினைக்கிறீர்கள்?

அது குறிப்பிட்ட அரசியல் கருத்தை முன்வைக்கும் படம்.  1990இல் நடந்த பிரச்னையைப் படம் பேசுகிறது. அதில் மாநிலத்தில் இருந்த அனைத்து மக்களுமே பாதிக்கப்பட்டனர். மத தூய்மை  சார்ந்த செயல்பட்டவர்களை இது தொடர்பாக தண்டிக்க வேண்டும் என்பது உண்மை. அது மோசமான நிலைமை தான். இதற்காக, முஸ்லீம் மக்களை ஒட்டுமொத்தமாக மோசம் என்று கூற முடியுமா? இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் நாம் இதற்காக தண்டிப்பது தவறானது. இந்த படம் ஏற்படுத்தும் வெறுப்புவாதம், பிரசாரம் இருபது சதவீத மக்களை 80 சதவீத மக்கள் எதிர்ப்பது போன்ற சூழலை உருவாக்கும். இது நாட்டை அழித்துவிடும். 

படத்தில் நீங்கள் முதல்வராக நிலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று காட்டுகிறார்களே?

படத்தில் காட்டப்படுவது உண்மையானது அல்ல. நிறைய மக்கள் தங்களுக்கு தோன்றியபடி ஏதேனும் ஒரு கதையை சொல்லுவார்கள். உண்மையை அறிய நீங்கள் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும். அதன் முடிவுப்படி பரூக் அப்துல்லா தான் குற்றவாளி என்றால், அவரை நீங்கள் நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தூக்கிலிடலாம். ஆனால் பிரச்னையில் தொடர்பே இல்லாத மக்களை காயப்படுத்தாதீர்கள். காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள், சீக்கியர்கள், குப்வாராவில் வல்லுறவுக்கு உள்ளான காஷ்மீர பெண்கள் ஆகியோரையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். நாங்கள் பேசும் உண்மையை இந்த நாடு கருத்தில் கொள்ளும் நாளும் விரைவில் வரும். 

2008-2014 வரையில் உங்களது கட்சி காஷ்மீரில் ஆட்சியில் இருந்தது. என்ன பணிகளை செய்துள்ளீர்கள்?

அப்போது மத்திய அரசின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அவருக்கு நன்றிகளை சொல்லவேண்டும்.  நாங்கள் 3 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினோம். இதன்மூலம் அவர்கள் மீண்டும் தங்களது குடும்பத்தை அழைத்துக்கொண்டு திரும்ப வருவார்கள் என்று நினைத்தோம். பண்டிட்களுக்கு உதவித்தொகை, மானிய உதவிகளை வழங்கினோம். மோடி ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் காஷ்மீருக்காக என்ன செய்திருக்கிறார். நாங்கள் நிறைய விஷயங்களை செய்யவில்லை. முக்கியமான காஷ்மீரிலுள்ள நிலையை நாங்கள் மோசமாக்கவில்லை. 

மோடி அரசு, காஷ்மீரை பாதுகாப்பான மாநிலமாக மாற்றியுள்ளதாக கூறுகிறதே, மேலும் சிறப்பு அந்தஸ்தை நீக்கியபிறகு நிறைய பண்டிட்டுகள் இங்கு வருவதாக கூறுகிறதே?

காஷ்மீரில் மத்திய அரசு ராணுவத்திற்கு 80 சதவீதம், மேம்பாட்டிற்கு 20 சதவீதம் என நிதி ஒதுக்கியுள்ளது. நிலைமை சரியாக இருந்தால் இங்கு எதற்கு ராணுவப்படையினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். அண்மையில்தான் மகன் லால் என்ற வேதியியலாளர் கொல்லப்பட்டார். பலரும் இங்கிருந்து தப்பித்து வேறிடங்களுக்கு சென்று வருகின்றனர். சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கம் இதைத்தான் சாதித்ததா? இப்படியுள்ள நிலையில் மக்கள் எப்படி நாட்டின் மேம்பாட்டிற்கு பங்களிக்க முடியும்?

இந்தியா டுடே 

ஏப்ரல் 4,2022

ராஜ் செங்கப்பா







 





கருத்துகள்