பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

 











மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது. 

பாமாயில்

மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம். 


உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன. 

பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க முடியாததாகிறது. மேலும் உணவின்றி உராங்குட்டான்கள் ஆண்டுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அழிந்துவருகின்றன. 




காடுகளை அழித்து மூர்க்கமாக விவசாய நிலங்களை அதிகரிப்பது வன உயிரினங்களை அழிக்கிறது. மேலும், காலநிலை மாற்றத்தை வேகப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுகிறது. செயற்கை உரங்களால் நிலமும், மண்ணும் மாசுபடுகிறது. இது காடுகளில் வாழும் பூர்விக குடிகளையும் பாதிக்கிறது. 

கிளிசரைல் ஸ்டியாரேட், சோடியம் லாரல் சல்பேட், பால்மேட் என 500க்கும் மேற்பட்ட பெயர்களில் பாமாயில் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், வீட்டுக்கு பயன்படுத்தும் பொருட்கள், பிஸ்கெட்ஸ், ஐஸ்க்ரீம், ஷாம்பூ, பற்பசை, துணி துவைக்கப் பயன்படும் திரவம் என அனைத்திலும் பாமாயில் பயன்படுகிறது. 

பாமாயிலை உணவில் பயன்படுத்துவதும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதை விட நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவது உடல்நலனுக்கு சிறந்தது. இந்திய அரசு, தற்சார்பை அதிகரிக்க வடகிழக்கு மாநிலங்களில் பனைமரங்களை பயிரிட்டு பாமாயிலை உற்பத்தி செய்யவுள்ளது. 

நேஷனல் ஜியோகிராபிக் கிட்ஸ் மே 2022






 

கருத்துகள்