இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த ஐந்து விஞ்ஞானிகள் - இந்தியா 75
இந்தியா 75
நவீன இந்தியாவை உருவாக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரிவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளது.
பெடங்காதாஸ் மொகன்டி, புவனேஸ்வர் நகரில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார். இவர், இயற்பியலாளராக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது, கரும்பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்.
ஜோதிர்ரஞ்சன் எஸ் ரே, நாகர்கன்டா என்று பகுதியில் பிறந்தவர். புவி அறிவியல் படிப்புகள் தொடர்பான தேசிய மையத்தில் இயக்குநராக உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறார். இவர், பாறைகளின் வயதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறார். விந்திய மலைத்தொடரின் வயதைக் கண்டுபிடிக்கும் புவியியல் ஆராய்ச்சியை செய்தவர் இவரே.
ஜோதிர்மயி தாஸ், ஐஏசிஎஸ் என்ற நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியை செய்து வருகிறார். இதனை மேம்பாடு செய்வது, சரியானபடி மருந்தை வழங்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
மமோனி தாஸ், ரூர்கெலா என்ஐடியில் படித்தவர். புவனேஷ்வர் நகரில் வாழ்க்கை அறிவியல் கவழகத்தில் வேலை செய்கிறார். உயிரியல் முறையில் எளிதாக சிதையும் பாலிமர்களை தயாரிக்க முயன்று வருகிறார். இது உடலில் மருந்துகளை எடுத்துச்செல்லும் தன்மை கொண்ட செல்களைப் பற்றியதாக மேம்பாடு அடைந்துள்ளது.
நாராயண் பிரதான், ஐஏசிஎஸ் நிறுவனத்தின் பேராசிரியர். வேதியியல் ஆராய்ச்சியாளரான இவர், நானோ பொருட்களை தயாரித்து வருகிறார். நானோ கிரிஸ்டல்களை வேதியியல் மற்றும் இயற்பியல் கலந்து செய்வதாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக