டவுன்சிண்ட்ரோம் குறைபாட்டை நெசவு மூலம் சமாளிக்கும் இளைஞர்!

 










ஷிரவண் குமார், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர். இவர், மயிலாப்பூரிலுள்ள டவுன்சிண்ட்ரோம் ஃபவுண்டேஷனில் பயிற்சிகளை செய்துவந்தார். ஆனால் பெருந்தொற்று அனைவரையும் பாதித்தது. இதனால், அந்த மையம் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஷரவண் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். 

இதற்காகவே இவரது பெற்றோர் நெசவு நெய்வதற்கான கருவியை (தறி) வீட்டிற்கு கொண்டு வந்தனர். இப்போது காலையில் நாற்பத்தைந்து நிமிடம், மாலை ஒரு மணிநேரம் நெசவு செய்வதில் ஷிரவண் ஈடுபடுகிறார். மீதி நேரங்களில், பெற்றோர் வாங்கிக்கொடுத்த மடிக்கணினி மூலம் டேட்டா என்ட்ரி செய்ய கற்று வருகிறார். 

தறியை வாங்குவதற்கு முன்னதாகவே அதனை எப்படி இயக்குவது என வீடியோ அழைப்பு மூலம் ஷிரவண் கற்றுக்கொண்டார். இவருக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட ஸ்ரீனிவாஸ் உதவியிருக்கிறார். நெசவு செய்வதை இப்படிக் கற்றுக்கொண்ட ஷிரவண், 250க்கும் மேற்பட்ட துணிகளை நெய்து விற்றிருக்கிறார். இதை ஷிரவணின் பெற்றோர் வணிகமாக செய்யவில்லை. ஷிரவண், முடிந்தவரை கவனமாக நெசவு செய்வதை செய்யவேண்டும். உற்பத்தித் திறன் தன்மையில் அவன இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள். இப்படித்தான் தனது குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் ஷிரவண் நெசவ செய்வதையும் நெய்த துணி வகைகளையும் பதிவிட்டிருக்கிறார். இப்போது மாதம்தோறும் ஏழு துணிகளை நெய்வதற்கான ஆர்டர் வருகிறது என ஷிரவணின் பெற்றோர் கூறுகிறார்கள். 

ஷிரவண், டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு சற்று தீவிரமாகும்வரை  சாதாரண பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். பிறகுதான் அவரை சிறப்பு பள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பை தேசிய திறந்தவெளி பள்ளியில் ஆங்கில மொழி வழியே படித்தார் ஷிரவண். 

டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களின் உடலில் கூடுதலாக குரோமசோம்கள் உள்ளதால், அவர்கள் செயல்பாடு துடிப்பாக இருக்கும். அவர்களின் உடலில் ஏற்படும் பதற்றத்தைக் குறைக்க நெசவுப் பயிற்சி உதவுகிறது. கூடவே யோகாவும் அவர்களை மேம்படுத்த உதவுகிறது. 


இந்து ஆங்கிலம்

லிஃபி தாமஸ் (Liffy thomas  The hindu)



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்