சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் நீக்கம்- வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகம் - விலக்கப்பட்ட தகவல்கள்
1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படை சட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சில மாவட்டங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. அசாம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள், இதன் பயனைப் பெறுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாந்தில் சிறப்பு ஆயுதப்படையினரால் 13 மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்பற்றி எழுதிய தமிழ் ஊடகங்கள் தொட்டு தடவிக்கொடுத்தது போல தலைப்பிட்டு அரசுக்கு கோபம் வராதது போல செய்தியை தலைப்பை உருவாக்கின. அந்த சம்பவம்தான் ஆயுதப்படை விலக்கத்திற்கு முக்கியமான காரணம். அங்கு ராணுவ ரீதியான பிரச்னைகள் 74 சதவீதம் குறைந்துள்ளன என ஆதாரத்தையும் மத்திய அரசு தனது முடிவுக்கு காரணமாக சுட்டியுள்ளது.
சிறப்பு ஆயுதப்படை சட்டம் ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமலில்தான் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 3 அன்று, மூன்று அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது.
அசாம்
இங்குள்ள 23 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் விலக்கப்படுகிறது. பக்சா, பெர்பெட்டா, பிஸ்வநாத், போன்கைகாவோன், சிராங், தர்ராங் என நீண்டுகொண்டே செல்கிறது. லகிபூர் சப்டிவிஷனில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் விலக்கப்படவில்லை.
நாகலாந்து
7 மாவட்டங்களில் சட்டத்தை விலக்கிக்கொள்கின்றனர். டிசெமின்யு, டியூன்சங் ஆகிய பகுதியில் முழுமையாகவும் கோகிமா, மோகோக் சுங், வோகா, லாங்லெங் பகுதிகளில் பகுதியளவும் விலக்கிக்கொள்ளப்படுகிறது.
மணிப்பூர்
ஜிரிபாம், தூபால் பிஷ்ணுபூர், காக்சிங், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய பகுதிகளில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டைப் பார்ப்போம்.
நாகலாந்து
1958
மிசோரம்
1967இல் அறிமுகமானது. 1985ஆம் ஆண்டு அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டது.
திரிபுரா
1970ஆம் ஆண்டு அறிமுகமாகி, 2015இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
அருணாசலப் பிரதேசம்
1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேகாலயா
1990இல் அறிமுகமானது. 2018இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தியா டுடே
கௌசிக் தேகா
salo(1975) movie scene
சிறப்பு ஆயுதப்படை சட்டம் அமலான காலம் முதல், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் கொலைகள் எண்ணிக்கை அளவிடவே முடியாது. அதை விளக்க நாசி படை கொடூரங்களை கூறிய இத்தாலி இயக்குநர் பசோலினியின் சலா பட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக