ரத்தினங்கள் - அறிவோம்

 




ரத்தினங்கள்

ரத்தினங்களை, சுரங்கங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். துளையிடுவது, வெடிவைப்பது ஆகிய முறையில் பாறைகளை உடைத்து ரத்தினக்கற்களை வெளியே எடுக்கிறார்கள். அரியவகை, குறைந்த தேய்மானம், அழகு ஆகியவற்றைப் பொறுத்து கற்களை பட்டைதீட்டி விலை வைத்து விற்கிறார்கள். சுரங்கத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து அதன் வடிவமைப்பை மாற்றுகிறார்கள். பிறகு அதனை பாலீஸ் செய்து தனியாக அல்லது நகையில் பொருத்தி விற்கிறார்கள். வைர சந்தையில் வைரங்களை அகழ்ந்தெடுத்து விற்பதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது. 

கி.மு.25 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான காலகட்டம் தொடங்கி ரத்தினங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்தில் மார்பில் அணியும் தொன்மை ஆபரணம் ஒன்று கண்டறியப்பட்டது. இதில் லாசுலி, கமேலியன், லாபிஸ் போன்ற அரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல மாசடோமியாவில் (தற்போதைய ஈராக்) நெக்லஸ் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதிலும் மேற்சொன்ன அரியவகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு.2500 ஆகும். 

தகவல்

nature guide rocks and minerals book


கருத்துகள்