வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து
நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு!
முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.
1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.
ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.
2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவியல் விஞ்ஞானிகள் கொண்டாடினர். இந்த சாதனையில் ஐஸ்லாந்திற்கும் சிறிய பங்களிப்பு உண்டு. இந்த நாட்டில் உள்ள 80 சதவீதப் பரப்பில் மனிதர்கள் வாழ முடியாது. 60 சதவீத பகுதியில் பாறைகளே நிரம்பியுள்ளன. இதனை மூடித்தான் பனிப்பாறைகள், எரிமலைகள் அமைந்துள்ளன.
”ஐஸ்லாந்து, பார்க்க நிலவின் தரைப்பரப்பைப் போலத்தான் இருக்கும். இங்குள்ள புவியியலை புரிந்துகொண்டு வீரர்கள், நிலவில் ஆய்வுக்கான சரியான பாறை மாதிரிகளை எடுத்து வருவதற்காகவே ஐஸ்லாந்தில் பயிற்சிகளை வழங்கியது” என்றார் தி எக்ஸ்புளோரேசன் அருங்காட்சியகத் தலைவரான ஆர்லைகுர் நெஃபில் ஆர்லைக்சன். இங்குள்ள ஹ்ரோசாபோர்க் எனும் இடத்தை வேற்றுகிரகம் என்றே மக்கள் அழைக்கின்றனர். அமெரிக்க விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்த இடத்தில் இதுவும் ஒன்று.
“பனிக்கட்டிகளைக் கொண்ட தரை, எரிமலைகள், எரிமலைக்குழம்பு என பல்வேறு விதமான செயல்பாடுகள் ஐஸ்லாந்தில் நடந்து வந்தன. எனவே, அதனை விஞ்ஞானிகள் பயிற்சியளிக்க தேர்ந்தெடுத்தனர் ” என்றார் ஐஸ்லாந்து விண்வெளி முகமையின் திட்ட இயக்குநரான டேனியல் லீப். இந்த விண்வெளி அமைப்பு, 2019ஆம் ஆண்டு செவ்வாயில் எப்படி ஆய்வுகளை செய்வது என பயிற்சிகளை வழங்கத் தொடங்கியது. இதற்கான விண்வெளி உடைகளை ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆப் டிசைன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்எஸ்1 எனும் இந்த உடைகளை விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு பணிகளைக் கொடுத்துள்ளனர். எதிர்காலத்தில் பல்வேறு கோள்களுக்கு செல்பவர்களுக்கு இது சிறந்த பயிற்சியாக இருக்கும்.
தகவல்
Wired
Space on earth
wired march 2022
https://www.bbc.com/travel/article/20190701-how-iceland-helped-humans-reach-the-moon
கருத்துகள்
கருத்துரையிடுக