இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?
நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.
இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.
யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.
2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்களை எடுக்கும்போது செல்லப்பிராணிகள் மன அழுத்தம் கொள்கின்றன என்று கூறியிருந்தது. இது உண்மையா என பூனைகளிடம்தான் கேட்டுச்சொல்ல வேண்டும். பொதுவாக பூனை என்பது ஆபத்து என்றால் ஓடிச்சென்று பதுங்கிவிடும் என்று இந்த அமைப்பு கூறுகிறது.
இதை இன்னொரு விதமாகவும் பார்க்கிறார்கள். பாட்டர்சீ டாக்ஸ் அண்ட் கேட்ஸ் ஹோம் அமைப்பு 2016இல் ஓர் ஆய்வைச் செய்தது. அதில், இப்படி வீடியோக்களைப் பார்ப்பவர்கள் செல்லப்பிராணிகளை அதிகம் தத்தெடுப்பார்கள் என்று கூறியது. தெருவில் திரியும் நாய்களை, பூனைகளை இப்படி இந்த அமைப்பு கூறியது. இது எந்தளவு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை.
ஓகே
செல்லப் பிராணி வீடியோக்களைப் பார்க்க நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்கள் அதைப் பார்த்து சிரிக்கிறார்கள். மனநலம் இதனால் நல்லமுறையில் இருக்கிறது.
பூனை பற்றிய வீடியோக்கள் அதிகம் இணையத்தில் உலவுவதால், அதனைப் பார்ப்பவர்கள் மெல்ல அவற்றை தத்தெடுக்க தொடங்குவார்கள். அதாவது, அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஒருவர் தன்னிடம் உள்ள செல்லப்பிராணி பற்றி வீடியோ எடுத்துப் போட்டு பெருமை கொள்வது தவறா என்ன? மேலும் இப்படி வீடியோக்களைப் போடுவது மூலம் அவர்களுக்கு காசும் கிடைக்கிறது.
நாட் ஓகே
இப்படி வீடியோ எடுப்பதற்காக, செல்லப் பிராணிகள் கஷ்டப்படுத்தால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். அவற்றின் மன அழுத்தத்தை எளிதாக அறிய முடியாது.
செல்லப் பிராணியின் வேடிக்கையான குணம் என்பது வீடியோவில் பார்ப்பவர்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் பயமுறுத்தப்படும்போது, பதற்றம் கொள்ளும் போது அதன் இயல்பு இப்படித்தான் இருக்கும். இதனை இணையத்தில் பலரும் புரிந்துகொள்வதில்லை.
இங்கிலாந்து, வேல்ஸில் விலங்குகளை சர்க்கஸிற்கு பயன்படுத்துவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. இனி செல்லப்பிராணிகளுக்கும் அப்படி ஒரு உத்தரவு வர வாய்ப்புள்ளது.
தி வீக் ஜூனியர்
கருத்துகள்
கருத்துரையிடுக