இந்தியாவில் அழியும் கழுகுகளின் நிலை!

 








2003ஆம் ஆண்டு தொடங்கி கழுகுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. 53 சதவீத கழுகுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. 

2003 - 40,387
2007 - 32,251
2011 - 34,950
2015 - 18,645

அழிவுக்கு காரணமாக வேதிப்பொருட்கள்

டைக்குளோஃபெனாக்

2006ஆம் ஆண்டு கால்நடை மருத்துவத்தில் கூட பயன்படுத்தக்கூடாது என அரசால் தடை செய்யப்பட்டது. இது கழுகுகளின் இறப்புக்கு முக்கியமான காரணம். 

ஆஸ்குளோஃபெனாக்

டைக்குளோஃபெனாக்கிலிருந்து தயாரித்து கால்நடை விலங்குகளுக்காக பயன்படுத்துகிறார்கள். 

நைம்சலைட்

இதை உட்கொண்ட கழுகுகளுக்கு ஆயுள் 30 மணி நேரம்தான். மெல்ல உடல் உறுப்புகள் சேதமாகும். அடுத்து சிறுநீரகம் செயலிழந்து போக மரணம் நேரிடுகிறது. 

கீடோபுரோஃபென்

செரிமான உறுப்புகளில் நச்சு வேகமாக பரவ, கழுகுகளுக்கு ஆயுள் 48 மணி நேரம்தான். 

பிக்கானெர், ராஜஸ்தான் 2019-2020

கால்நடைகளுக்கு பயன்படுத்தும் ஸ்டெராய்ட் அல்லாத மருந்துகளின் பாதிப்பு, மின்சாரம் பாய்ந்து இறந்துபோவது. இதன் காரணமாக 207 கழுகுகள் இறந்துபோயின. 

ராய்காட், மகாராஷ்டிரா 2010

நிசார்கா எனும் புயல் பாதிப்பு ஏற்பட்டால் வாழிடம் அழிந்துபோனது. இதனால் இறந்துபோன கழுகுகளின் எண்ணிக்கை 210.

ஜெய்சல்மர், ராஜஸ்தான், 2021

மின்சாரத் தாக்குதல்,  கால்நடை மருந்துகள் ஆகியவற்றால் 120 கழுகுகள் இறந்துபோயின. 

காம்ரூப், அசாம் 2022

நாய்களைக் கொல்ல வைக்கப்பட்ட பூச்சிமருந்துகளால்  செத்துப்போன கழுகுகளின் எண்ணிக்கை 100

டவுன் டு எர்த் 1-15 2022





கருத்துகள்