சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

 







சிறப்பு ஆயுதப்படை சட்டம்

1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது. 

எப்படி அமல்படுத்துகிறார்கள்?

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம். 

என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்?

மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்தால் உடனே அவர்களை கைது செய்து விசாரிக்க முடியும். இதற்கு அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. வீடுகளை சோதனையிட எந்த வாரண்டும் காட்ட வேண்டியதில்லை. சந்தேகம் என்ற ஒரு கருத்தே அனைத்துக்குமே போதும். 

விமர்சனங்கள் ஏன்?

மனித உரிமை மீறல்களைத்தான் முக்கியமானதாக கூறுகிறார்கள். 2017ஆம் ஆண்டு இதுதொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டன. அதில், 2012 -2016 காலகட்டத்தில் 186 புகார்கள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. பலவும் கொலை, பாலியல் குற்றங்கள் தொடர்பானவை. அனைத்துமே சிறப்பு ஆயுதப்படையினர் மீதுதான் இருந்தன. 1991 முதல் 2015 வரை சிறப்பு ஆயுதப்படை மீது விசாரணைக்கு வழக்குதாரர்கள் கோரினாலும் அதற்கு 30 வழக்குகளில் அனுமதி மறுக்கப்பட்டது.  மணிப்பூரில் மலோம் பகுதியில் பத்து பேர் சிறப்பு ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்துதான் இரோம் சர்மிளா பதினாறு ஆண்டுகள் பட்டினிப் போராட்டம் நடத்தினார்.  

2005ஆம் ஆண்டு நீதிபதி பி.பி ஜீவன் ரெட்டி கமிட்டி, சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி கூறியிருந்தார். 2017இல் ஆயுதப்படையின் செயல்பாடுகளை சீர்திருத்தம் செய்து பரிந்துரைகளை வழங்கினர்.  ஆனால் இந்திய அரசு ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்கவில்லை. நிராகரித்துவிட்டது. 


pinterest




கருத்துகள்