அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர், ஆழ்கடல் டைவர்களுக்கு ஏற்படும் அழுத்த பாதிப்பு

 

 


 

 

 







 

அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

கொடிகளை வடிவமைப்பதில் உள்ள நுட்பங்கள் என்ன?

தேசியக்கொடியோ, கட்சிக்கொடியோ, ராணுவப்பிரிவு கொடியோ அதை கம்பத்தில் கட்டி இறக்கவேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். எனவே, அதை செவ்வகமாக இருந்தால்போதும் என வடிவமைக்கக்கூடாது. கொடியாக கம்பத்தில் பறக்கும்போது தெளிவாக தெரிய வேண்டும். கொடியை எளிமையாக வடிவமைக்கவேண்டும். எளிமை என்பதில் அதை நினைவுகூர்ந்து தாளில் யாரேனும் வரையும் விதமாக இருப்பதும் அடங்கும். அதை பல்வேறு வடிவங்களில் சுருக்கினாலும் வேறுபாடு வரக்கூடாது. நல்ல விஷயங்களை பிறரிடம் இருந்து காப்பி அடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் கொடிகளைப் பொறுத்தவரை இன்னொரு நாட்டைப் போல இருந்தால் சொந்த நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள். கொடியில், நிறங்கள் தெளிவாக தெரியவேண்டும். நிறங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது நல்லது. வெள்ளை நிற பின்னணியில் நீலநிறம் என கொடி தெளிவாக இருப்பது நல்லது.

கொடியில் குறிப்பிட இனக்குழு அல்லது தனித்துவத்தை உணர்த்தும் விஷயங்கள் இருக்கவேண்டும். குழப்பத்தை தருவதாக மாறிவிடக்கூடாது. வார்த்தை, இலச்சினை என ஒன்றையே பலமுறை கூறக்கூடாது

ஆழ்கடல் டைவர்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன?

கடலில் ஏற்படும் அழுத்தம் டைவர்களுக்கு கை, கால் மூட்டுகளில் தீவிர வலி, கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி, மயக்கம், அதிர்ச்சி, இறப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடலில் அதிக அழுத்தத்தில் இருந்துவிட்டு நீர் மட்டத்தில் மேலே வருபவர்களுக்கு பெண்ட்ஸ் எனும் இப்பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், உடலில் நைட்ரஜன் வாயு அதிகரிப்பதே. நைட்ரஜனால் உடலிலுள்ள திசுக்கள் அழுத்தமுற்று சுருங்கத் தொடங்குகின்றன.

ட்ரைட்காபோபியா என்றால் என்ன?

பதிமூன்றாம் எண் என்றால் உலகம் முழுக்க தீயசக்தி எண் என்ற பயம் உள்ளது. நிறைய கட்டிடங்களில் பதிமூன்றாம் எண் என்ற தளமே கண்ணில் படாது. இருந்தாலும் அதற்கு எண் ஏதும் இருக்காது. பதிமூன்றாம் நம்பரில் வீடு பொதுவாக இருக்காது. ஜோதிட மூடநம்பிக்கையால், பதிமூன்று என்ற எண், பல்வேறு இடங்களில் தவிர்க்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர் யார்?


எலிசபெத் பிளாக்வெல் என்ற பெண்மணி, 1849ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஜெனிவா மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்றார். பல்வேறு தடைகளை எதிர்ப்புகளைக் கடந்து சிறிய மருத்துவமனை ஒன்றை பெண்கள், குழந்தைகளுக்காக நடத்தினார். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் பெண்களே.


நன்றி - ஃபிளேக் டிசைன் கமிஷன் ரிப்போர்ட்





 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்