டெக் நிறுவனங்கள் அதீத பணபலத்தை வைத்து அரசை, ஒழுங்குமுறை அமைப்புகளை வளைத்து வருகின்றன!

 

 

 





amba kak

ai researcher

இந்தியாவில் இணைய சமத்துவம், அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போது ஏஐ தொடர்பான கொள்கையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறீர்கள். டைம் இதழின் ஏஐ செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சரியமளிக்கிறதா?

தொழில்நுட்ப கொள்கை தொடர்பாக பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறேன். இப்போது என்னைப் பற்றி இதழ்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுமக்களின் நலன் கருதிய கொள்கையில் வேலை செய்கிறேன். ஏஐ நவ் இன்ஸ்டிடியூட், டெக் நிறுவன உரிமையாளர்களை நோக்கி கடுமையாக கேள்விகளை முன்வைத்துவருகிறது. பல்வேறு அரசுகளிடம் லாபி செய்து வருவதால், முறைப்படுத்தும் அமைப்புகள் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெக் உலகில் ஜனநாயகத்தன்மையை கொண்டு வர நினைக்கும் பலருடன் இணைந்து கொள்கைகளை வடிவமைக்க உழைத்து வருவதில் மகிழ்கிறேன்.

சாம் ஆல்ட்மனை, மேசியா என்று டெக் தளத்தில் புகழ்கிறார்களே?

இங்கு நாம் ஓப்பன் ஏஐ பற்றி பேசவேண்டியதில்லை. மேசியா என ஒருவரை புகழ்வதெல்லாம் மார்க்கெட்டிங் உத்திகள்தான். டிரேட் கமிஷன், வாடிக்கையாளர் பாதுகாப்பு போட்டி ஒழுங்குமுறை ஆணையம், டெக் முறைகேடுகளை கவனமாக ஆய்வு செய்து வருகிறது. மார்க்கெட்டிங் உத்திகள், லாபம் சம்பாதிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டவை. ஆக்கப்பூர்வ ஏஐ விவகாரத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய நிறைய சவால்கள் உள்ளன. அவற்றை பலரும் மார்க்கெட்டிங் மாயாஜாலத்தால் மறந்துவிடுகிறார்கள்.

ஒழுங்குமுறைப்படுத்தல், ஏஐ கண்டுபிடிப்புகளுக்கு எதிரானதாக மாறுமா என இந்திய ஐடி அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்களே?

ஏஐ ஆப்புகளுக்கு எதிரான நடவடிக்கை என்று இதைக் கருதவேண்டியதில்லை. அதிலும் கூட தகவல் பாதுகாப்பு, தொழில்நுட்ப விதிகள், காப்புரிமை, தொழிலாளர் விதிகள் என நிறைய விஷயங்களை நாம் கவனித்து ஒழுங்குப்படுத்தத்தானே வேண்டும்? ஏஐ என்பதை வெறும் தொழில் என்பதாக கருதாமல் அதை பயன்படுத்துபவர்கள், தாக்கம் பெறுபவர்கள் என அனைவரையும் இணைத்து சற்று பெரியளவில் பார்க்கவேண்டும்.

தினசரி ஏஐயில் ஏதாவது ஒரு கருவி, மென்பொருள் வெளியாகிறது. இது மனிதர்களுக்கு அச்சுறுத்தலானதா?

2023ஆம் ஆண்டில் ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எழுபத்தைந்து சதவீத முதலீட்டை மூன்று பெரும் டெக் நிறுவனங்களான அமேசான், எம்எஸ், கூகுள் வழங்கியுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களை, இப்பெருநிறுவனங்கள் எளிதாக கைப்பற்றி சந்தையில் தங்களி்ன் மேலாதிக்கத்தை நிறுவ முடியும். இந்த நிறுவனங்கள், விதிகளை மீறி ஏராளமான பயனர்களைப் பற்றிய தகவல்களை திரட்டி வைத்து, அதை சந்தையில் விற்று லாபம் பார்த்து வருகிறார்கள். இப்படி கிடைக்கும் அதீத பொருளாதார பலத்தை வைத்து அரசியல், ஒழுங்குமுறை ஆணையங்களை எளிதாக அடிபணிய வைக்க முடியும். ஐரோப்பிய யூனியனில் மேக கணியத்தில் எம்எஸ் முதலீடு செய்வது, அந்நிறுவனத்தின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும்.  

சாட்ஜிபிடி வரவால் மக்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

போலிச்செய்திகள், புகைப்படங்கள், தகவல்கள் வெளியே வரும். அவற்றை எது சரி தவறு என ஒருவர் கண்டறிய முடியாது. குறிப்பாக நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, கைரேகை, கண்கள் பற்றிய தகவல்களை எளிதாக ஒருவர் மாறுதல் செய்துவிடமுடியும். இங்கு கண்டுபிடிப்புகள் வேண்டும் என குரல்கள் எழுகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் யார் வெல்கிறார், தோற்கிறார் என்று கூறுவது கடினமாகிக்கொண்டே வருகிறது.

நீலம் ராஜ்
டிஓஐ


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்