கடந்த காலத்தில் இந்தியாவின் பெருமையைத் தேடிக்கொண்டிருந்தால் வருங்காலம் என்பதே நமக்கு இருக்காது! - சேட்டன் பகத்
போலித்தனமான அறிவியலே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம்
சேட்டன் பகத்
நவராத்திரிக்கான ஏழுநாட்கள் விரதத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன். கடந்த முப்பது ஆண்டுகளாக விழா காலங்களில் உண்ணாநோன்பை கடைபிடித்து வருகிறேன். இப்போது இந்த கட்டுரையைக் கூட விரதத்தை முடித்தபிறகு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் கடைபிடிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன். ஆனால் இந்த நேசம் சிலசமயம் புதிய மாற்றங்களை நிராகரித்து விடும் என்பது உண்மையே. பெருந்தொற்றுகாலம் இதுபோல நம்பிக்கை கொண்ட அறிவியலை நம்பாத இந்துகள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். இவர்களைப் போன்ற அவ நம்பிக்கைவாதிகள் இருப்பதால்தான் நம்மை வெளியிலிருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் கூட இறப்புகளை தடுத்தபிறகும் இந்தியாவில் கொரானோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது. இதனை பலரும் ட்வீட் செய்வதற்குள் நான் சில விஷயங்களை கூறிவிடுகிறேன்.
1. நான் அனைத்து இந்துக்களையும் அறிவியல் மீது அவநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறவில்லை.
2. பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அறிவியலை நம்பாதவர்கள் அல்ல.
3. இந்து மதமே அறிவியல் நம்பிக்கை அற்றது என்று பொருள் கொள்ளக்கூடாது.
கிறிஸ்தவம், இஸ்லாம் என இரு மதங்களிலும் பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. இந்தியாவின் அரசியல் என்பது பெரும்பான்மையினரான இந்துகளைப் பொறுத்தே உள்ளது. எனவே, நான் இந்து அமைப்பில் உள்ள ஒருவனாக அதில் உள்ள பிரச்னைகளைப் பேசுகிறேன். இந்தியாவில் அறிவியல் சோதனைகளை செய்து நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். ஆனால் இன்று அவர்களை விட அதிக எண்ணிக்கையிலான அறிவியல் நம்பிக்கையற்ற மூடர்கள் அதற்கு எதிராக உள்ளனர். கூடுதலாக, அவர்கள் போலிச்செய்திகளையும் கூட இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இத்தகைய நம்பிக்கையற்ற முட்டாள்களின் செயல்பாட்டிற்கு இந்தியா பெரிய விலையை கொடுக்கவேண்டியதிருக்கிறது. இப்போது அறிவியல் மனப்பான்மை பற்றி பேசிவிடுவோம். நம்முடைய புராணங்களில் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளன. வானில் பறக்கும் புஷ்பக விமானம் முதல் பல்வேறு ஆயுதங்கள் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை நவீன காலத்தில் பெரிதுபடுத்தி பேசிவருகிறார்கள். இதனால் என்ன பிரயோஜன் என்று தெரியவில்லை. நமது வேதங்களில் அனைத்தும் உள்ளது என்று பேசிவருகிறார்கள். ஆனால் அதனை நம்பினால் இன்று நம்முடைய அறிவியல் வளர்ச்சி என்னவாகும்? அறிவியலைப் பொறுத்தவரை நம்பிக்கைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
உதாரணத்திற்கு நம் நாட்டில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மக்களைக் காக்க நாம் தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியிருந்தால் பெரும்பாதிப்பை தடுத்திருக்க முடியும். ஆனால் அறிவியல் பூர்வாமாக முயற்சிகளை செய்யாமல் கொரானோவை விரட்ட முயன்றுகொண்டிருந்தோம். அறிவியல்ரீதியாக யோசிப்பவர் எப்போதும் புதிய விடைகளைக் தேடிக்கொண்டே இருப்பார்.
அறிவியலில் நம்பிக்கை இல்லாதவர் இந்து வரலாற்றில் உள்ள சிற்பங்கள், நூல்கள் ஆகியவற்றில் கொரானோவுக்கு தடுப்பூசியைத் தேடுவார். வரலாற்றை கேள்விகள் கேட்காமல் நம்புவது இவர்களின் வழக்கம். இந்தியாவின் மருத்துவம், கல்வி, உணவு, பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ளவற்றை அப்படியே பதிலாக ஏற்றுக்கொள்வது அறிவியல் பூர்வமற்ற இந்துகளின் முட்டாள்தனமான பழக்கம். வேதங்களில் உள்ள அறிவியலை எடுத்துக்காட்டி நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவியலில் முன்னணியில இருந்தோம் என்று கூறிவருகிறார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி, அப்படி இருந்த நாம் எப்படி அந்த அறிவை இழந்தோம், எந்த காலகட்டத்தில் இழந்தோம் என்பதைத்தான். அறிவியல் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. இதில் நகைமுரண் என்னவென்றால், நாம் நமது பிள்ளைகளை அறிவியல் கற்க அனுப்பினால் கூட அதை வாழ்க்கையில் கடைபிடிக்காமல் இருக்கிறோம். நாம் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிற நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் நம்மை கடந்து சென்றுவிடும்.
கொரானோ பரவிக்கொண்டிருந்தபோது, இந்திய அரசு கும்பமேளா நடத்தியது. இது இரண்டாவது அலையில் மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வழிவகுத்துவிட்டது என வெளிநாடுகள் நம்மைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவமனையில் இடம் இல்லாதவர்களை வராண்டாக்களில், தரையில் வைத்து சிகிச்சை கொடுக்ககப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றின் கரையில் வைத்து எரியூட்டப்பட்டு வரும் காட்சி பதைபதைக்கவைக்கிறது. பிப்ரவரியில் நோய்த்தொற்று அதிகரித்தாலும் கூட இந்திய அரசு ஏப்ரல் இறுதியில்தான் தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கலாம் என முடிவெடுக்கிறது. இது மிகவும் தாமதமான முடிவு.
நான் மதத்தை மதிக்கிறேன். அறிவியலை மதத்தை விட மேலானதாக கருதவில்லை. ஆனால் இரண்டிலும் நான் உண்மையாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன். கடந்த காலத்தை நினைத்து கற்பனையான உலகில் வாழ்ந்தால் நம் எதிர்காலம் கடினமாகவே இருக்கும். அறிவியலின் மீதும் அதன் கண்டுபிடிப்பு மீது நீங்கள் ஆர்வமாக இருக்கவேண்டும். அதுதான் இந்தியாவின் பொற்காலமாக இருக்கும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக