நாசா கண்டுபிடிக்காத பொருட்கள் இவை! - வெல்க்ரோ, டேங், க்வார்ட்ஸ் கடிகாரம்

 

 

 

 

 

Pan, Kitchenware, Teflon, Utensil, Empty

 

நாசா கண்டுபிடிக்காத பொருட்கள்


டேங்

1962இல்தான் இந்த குளிர்பானம் நாசாவின் விண்வெளி வீர ர்ரகளுக்கான மெனுவில் இடம்பெற்றது. டேங் பானம் முதன்முதலில் உருவாக்க்ப்பட்டது ஜெனரல் புட்ஸ் நிறுவனத்தால். 1952ஆம் ஆண்டில். இதனை நாசா உருவாக்கவில்லை.


வெல்க்ரோ


இந்த கண்டுபிடிப்பை நாசா தனது பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொண்டது மட்டுமே உண்மை. உண்மையில் 1940ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு இது. நாசா இதனை அப்போலா விண்வெளித் திட்டத்திற்காக உருவாக்கவில்லை. ஈர்ப்புவிசை இல்லாத சூழலில் வெல்க்ரோவை எளிதாக பயன்படுத்த முடியும் என நாசா அமைப்பு நினைத்தது. வெற்றிகரமாக அதனை பயன்படுத்தியது.


டெஃப்லான்


இந்த கோட்டிங் பொருளை டுபான்ட் என்ற நிறு்வனம்தான் முதலில் உருவாக்கியது. இதனை நாசா மேம்படுத்தி விண்வெளி வீரர்களுக்கான ஷீல்டுகள், உடைகள் ஆகியவற்றை தயாரித்தது.


பார்கோடு


இதனை நாசா உருவாக்கவில்லை. இதில் வேறுபட்ட ஒன்றை கண்டுபிடித்து விண்கலத்தில் பல்வேறு பொருட்களை வேறுபடுத்த பயன்படுத்தியது.


க்வார்ட்ஸ் கடிகாரம்


இக்கடிகார தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது 1927இல். நாசா, 1960இல் துல்லியமான க்வார்ட்ஸ் கடிகாரத்தை உருவாக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டது மட்டுமே உண்மை.









கருத்துகள்