மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ
நேர்காணல்
சர் டிம் பெர்னர்ஸ் லீ
எம்ஐடி பேராசிரியர். இணையத்தை கண்டுபிடித்தவர். ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர்.
பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம்?
இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான். காரணம், நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள். இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது. ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது. இப்படி தகவல்களை திருடுவது, விற்பது என்பது அரசியல், வணிகம், குற்றம் என பல்துறை சார்ந்ததுதான். ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது.
உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ
மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதில் நல்ல, கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். 2016ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் வெளிவந்தபோது, மக்கள் அவர்களின் தகவல்களை பிறர் படிக்கிறார்கள், பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அறியவேண்டுமென நினைத்தேன். ஆனால் சிலர் பிறரது அனைத்து தகவல்களையும் படிக்க முடிகிறது என்பதை என்னால் ஜனநாயகம் என்பதாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. சமூக வலைத்தளங்களில் இத்தகைய விஷயங்கள் நடக்கும்போது பங்கேற்பவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பது அவசியம்.
பல கோடி பயனர்களின் தகவல்களை பெரு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர. ஆனால் மக்கள் இதைப்பற்றி கவலைப்படுவதில்லையா?
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பிரச்னை வெளிவந்தபோது சமூக வலைத்தளத்தில் இருந்த மக்கள் பதறிப்போனார்கள். உடனே அதிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வேறு தகவல்களை திருடாத சேவைக்கு மாறினர். இது எப்போதும் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பதுதான். மக்கள் தினசரி வாழ்க்கை நெருக்கடிகளுகு மத்தியில் பிரைவசி பற்றி கவலைப்படுவதில்லை என்பது உண்மை. தேர்தல் என்று வரும்போது, மக்களை சமூக வலைத்தளங்கள் மனநிலையை அளவிடுகின்றன. இது தாமதமாகவே மக்களுக்கு தெரிய வந்தது.
இணையத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக நினைக்கிறீர்களா?
காலம்தோறும் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இணையம் புகழ்பெற்றபோது நேவிகேட்டர் ப்ரௌசர் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறினார்கள். பின்னர் அதனை உடைத்து மைக்ரோசாப்ட் வந்தது. அப்போதும் அதேபோல்தான் புகார்கள் எழுந்தன. இப்போது அனைத்து மக்களும் ஒரே சர்ச் எஞ்சினைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூவுகின்றனர். ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் முந்துவது இயல்பானது. அதற்கு புதுமைத்திறன் தேவை. நாம் இணையத்தை சுவர் கொண்ட தோட்டமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்னால் பரந்து கிடக்கும் காடு மிகவும் மதிப்பு கொண்டது.
சாலிட் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறீர்கள். இணையத்தை உருவாக்கியதைப்போன்ற மகிழ்ச்சி உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?
நிச்சயமாக. நான் உருவாக்கியுள்ள சாலிட் என்ற அமைப்பு மையப்படுத்தாத ஒன்று. இதில் நீங்கள் வீடியோகால் ஒன்றை எளிதாக செய்யமுடியும். இதற்கென போனில் ஆப்களை பயன்படுத்தியிருப்பீர்கள். இதில் பயனரின் தகவல்களைச் சேகரிக்க எந்த தகவல்தளமும் கிடையாது. எனவே பயனர்கள் மகிழ்ச்சியோடு இதனைப் பயன்படுத்தலாம்.
உங்களது சாலிட் என்ற அமைப்பு பிரைவசி பிரச்னையை தீர்த்துவிடுமா?
நிச்சயமாக. நீங்கள் சாலிட் அமைப்பை பயன்படுத்தும்போது யாரேனும் ஒருவர் தகவல்களை பயன்படுத்த கோரினால் அதை அனுமதிக்கலாம். அல்லது மறுக்கலாம். எங்களது அமைப்பு ஐரோப்பிய யூனியனின் தகவல் சட்டத்தை ஆதரிக்கிறது. அதற்கேற்ப நாங்கள் இதனை உருவாக்கியுள்ளோம். சமூகத்திற்கான விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு மென்பொருளை உருவாக்குகியுள்ளோம். இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை மக்கள்தான் கூறவேண்டும்.
சயின்ஸ் போகஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக