மருத்துவராகப் போராடும் செரிபெரல் பால்சி குறைபாடு கொண்ட மாணவி! - இது கேரளத்தில் நடைபெறும் துயரம்

 

 

 

 

 

 

Cerebral Palsy - Latika Roy Memorial Foundation ...

 sample picture

 

 

செரிபெரல் பால்சியோடு போராடும் மாணவி


மூளையைப் பாதிக்கும் ஸ்பாஸ்டிக் செரிபெரல் பால்சி எனும் குறைபாடுடன் பிறந்தவர் அஸ்வதியிஸ். இவர் பிறந்து 52 நாட்களில் தனது பெற்றோரை இழந்தார். கேரளத்தில் மலப்புரத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர்.


பல்வேறு சிரமங்களுடன் படித்து நீட் தேர்வு எழுதியவர் 3,44,859 என்ற ரேங்கைப் பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர் விண்ணப்பித்தார். ஆனால் இவருக்கு மருத்துவப்படிப்பை படிப்பதற்கான தகுதி இல்லை என்று கூறி அரசு அவரை படிப்பில் சேர்க்க மறுத்துவிட்டது.


சாதாரணமானவர்கள் என்றால் மனம் தளர்ந்து போயிருப்பார்கள். ஆனால் அஸ்வதியிஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் அவருக்கு தனியாக சிறப்பு சோதனை ஒன்றை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டது. ஓடுவதில், குதிப்பதில், நடப்பதில் பிரச்னை இருந்தது. ஆனால் பொருட்களை கையாளுவதில் திறன் இருந்தது. டிசம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வந்தததால் மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்காக சேர்ந்துவிட்டார். ஆனால் இதோடு அஸ்வதியிஸூக்கு சோதனைகள் நிற்கவில்லை.


மாநில தேர்வு கமிஷன் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. அஸ்வதியிஸ்ஸூக்கு கொடுத்த இட ஒதுக்கீடு காரணமாக பொதுமக்களுக்கான சிகிச்சையில் பாதிப்பு ஏற்படும். மேலும், இதுபோன்ற ஏராளமான நபர்கள் இதனைப் பயன்படுத்த முயன்றால் அது பாதிப்பை ஏற்படுத்தும்.


அஸ்வதியிஸைப் பொறுத்தவரை மூன்று வயது முதல் பத்தாவது வரை பொதுப்பள்ளியியில் படித்தவர்தான். நான் பெரும்பாலான சிறுவயதை மருத்துவமனையில் கழித்தேன். எனவே, நான் மருத்துவராவேன் என்ற கனவை அங்கேதான் வளர்த்துக்கொண்டேன். எந்தளவு எதிர்ப்புகைள சந்தித்தாலும் என் கனவை பின்தொடர்வேன் என்றார் அஸ்வதியிஸ்.


மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016படி மருத்துவம் படிப்பதற்கான இடங்களில் 5 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. அதனை மாநில அரசு, அரசின் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். . இவரது குறைபாட்டின் அளவு 63.3 சதவீதமாக உள்ளது. 80 சதவீதமாக இருந்தால் மெடிக்கல் போர்டுகள் கூறுவது போல் மருத்துவப் படிப்பதைத் தொடர்வது கடினமாக இருக்கும்.. நான் என் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் நீதிக்காக போராடி வந்துள்ளேன். மெடிக்கல் போர்டுகள் எப்போதும் எனது நம்பிக்கையை குலைத்தே வந்திருக்கின்றன. நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு காரணம் எனது நம்பிக்கையும் உழைப்பும்தான். பிறருக்கு முன்பாகவே என்னால் படிக்க முடியும் என்பதை நான் நிரூபித்து வந்திருக்கிறேன் என்றார் அஸ்வதியிஸ்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


சாஜூ பிலிப், அனந்தகிருஷ்ணா


கருத்துகள்