காதல் துணைவரால் பகிரப்படும் மோசமான பழக்கவழக்கங்கள்! - தடுக்க முடியுமா?

 

 

 

 

 

PINOCCHIO MV K-Drama [KISS ME] (Choi InHa & Choi DalPo) - YouTube

 

 

உறவுகளை நூடுல்ஸாக சிக்கவைக்கும் பழக்க வழக்கங்கள்!


யாராவது முக்கியமான விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் இன்ஸ்டாவில் துபா புயுகிஸ்துனின் புகைப்படத்தை அல்லது பார்க் சின் ஹையின் குறும்பான போஸை ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் பெயர்தான் பப்பர். இப்படி பேசும்போது, ஏதாவது கேள்விகளை பிறர் கேட்கும்போது ஜெல்லி சூயிங்கம்மை அசுவாரசியமாக மென்றபடி கட்டைவிரலால் போனை தேய்த்துக்கொண்டிருக்கிறீர்களா? இப்படி செய்வது நாளடைவில் ஒருவரின் உறவுகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். காதலர்களாக உள்ளவர்களி்ல உள்ளவர்களில் ஒருவர் அழைப்பை ஏற்று பேசியபடியே இருப்பது, அல்லது சமூக வலைத்தளங்களில் உலாவியபடியே இருப்பது அவர்களிடையே உறவின் நெருக்கத்தை குறைக்கிறது என்றார் பேய்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் மெரிடித்.


இப்படி போனை விரலால் தேய்ப்பதை ஸ்னப்பிங் என்று சொல்லலாம். இப்படி போனை தேய்த்துக்கொண்டே இருக்கும் பழக்கம் பப்பிங் என்று கூறுகின்றனர். இந்த ஆய்வு இரண்டு வகையானது. இதில் ஒருவர் போனை அடிக்கடி சோதிப்பது ஆகிய பழக்கமும் இடம்பெற்றது. ஆய்வில் 300 பேர் பங்கேற்றனர். காதலர்களில் ஒருவரிடம் அவரது துணைவர் முக்கியமாக பேசிக்கொண்டிருக்கும்போது போனில் என்ன செய்கிறார், அப்படி பேசுவது அவருக்கு எப்படி உள்ளது., உரையாடும்போது திருப்தி ஏற்படுகிறதா என்பதைப்பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. இப்படி பேசும்போது அவர்களின் உறவில் பாதிப்பு ஏற்படுவது அறியப்பட்டது. முதல்முறை நடைபெற்ற ஆய்வில் போனை எப்படி கையாள்கிறார் என்பதும், இரண்டாவது ஆய்வில் உறவில் திருப்தியுள்ளதா என்பதும் கேட்கப்பட்டது.


Bad Habits Men Get Rid Of After Marriage - Boldsky.com

ஒருவர் குறிப்பிட்ட உறவில் இருக்கும்போது அவருடைய பழக்கவழக்கங்கள் அவரது துணைவருக்கு்ம பகிரப்படும். குறிப்பாக பல் விளக்காமல் காலை உணவை நொறுக்குவது, முக்கு கடையில் பானிபூரியை முக்குவது, கணபதி அண்ணன் கடையில் பிங்கோ பாக்கெட்டுகளை தள்ளுபடி விலையில் வாங்கி தாராளமாக தின்பது, காலையில் விருப்பமிருந்தால் நேரமே எழுவது, உடற்பயிற்சியை ஊசலாட்டத்தில் விட்டு எக்ஸ்ட்ரா சீஸ் வைத்து பிட்ஸா ஆர்டர் செய்வது, பாடி ஷேமிங் போராளியாக மாறுவது ஆகியவை இதில் உள்ளடங்கும்.


பொதுவாக காதல் உறவில், மண உறவில் ஒருவருக்கு மோசமான பழக்கங்கள் இருந்தால் அது அப்படியே பிறரது வாழ்விலும் எதிரொலிக்கும். என்றார் சின்சினாட்டி பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் கார்னி ரெக்செக். திருமணமானவர் தனக்கு இதயம் சார்ந்த பிரச்னை என்றால் உடனே அதனை சரிசெய்ய மருத்துவரின் உதவியை நாடுகிறார். ஆனால் திருமணமாகவர் உடனே இதற்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. இதற்கு காரணம் அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பாக இருக்கலாம். ஆனால் துணைவராக இருப்பவரின் பல்வேறு மோசமான பழக்கங்கள் காலப்போக்கில் மற்றொருவரின் வாழ்விலும் எதிரொலிக்கிறது என்பதுதான் இறுதி செய்தி.






பிபிசி




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்