வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஆதரிக்கும் ஆர்பிஐ! - மெல்ல தேயுமா வங்கிகள்?

 

 

 

 

 

No transaction charges for RTGS & NEFT: RBI - DKODING

 

 

இனி வரும் காலத்தில் வங்கிகளை நம்பி நாம் இருக்கவேண்டியதில்லை. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளன. இதில கணக்கு தொடங்கி பணத்தை பிறருக்கு அனுப்புவது பெறுவது, வணிகத்திற்கு பயன்படுத்துவது ஆகியவை இனி மெல்ல அதிகரிக்கும். சாதாரணமாகவே யூனியன்பேங்க் வகை செயலியை விட கூகுள் பே போன்ற வங்கியல்லாத நிறுவனங்களின் செயலிகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது. இதற்கு காரணம், அவர்கள் பயனர்களை வங்கிகளை விட எளிதாக புரிந்துகொள்வதுதான். யூனியன்பேங்க் ஆப் இந்தியா, சிட்டியூனியன் பேங்க் போன்ற நிறுவனங்கள் செயலிகளின் வசதியில் காட்டும் அக்கறையின்மை கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற நிறுவனங்களின் செயலிகளுக்கு ஆதரவாக அமைகிறது.


தற்போது ஆர்பிஐ வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் பயனருக்கு வழங்கும் நிதியின் அளவை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய நிதி திட்ட அமைப்பில் தற்போது பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் மட்டுமே உள்ளன. இனி வரும் காலத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளே வர வாய்ப்புள்ளது. இதன்மூலம் கிராமம், நகரம் என பாகுபாடற்று அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.


மரபான வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வருகையால் மெல்ல தேக்கத்தை சந்திக்கும் என்பது உண்மைதான். உடனே நடக்காது என்றாலும் மெல்ல அதைநோக்கித்தான் அரசின் நடவடிக்கைகள் உள்ளன. ஆசியா அளவில் இந்த வகை நடவடிக்கைகள் 87 சதவீதம் உள்ளன. உலகளவில் இதன் அளவு 64 சதவீதம் ஆகும். இந்தியாவில் இதன் மதிப்பு 1.9 லட்சம் கோடியாக உள்ளது. 2025இல் 6.2 லட்சம் கோடியாக இந்த மதிப்பு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.


தற்போது டிஜிட்டல் முறையில் நடைபெறும் பரிவர்த்தனைகள் ஆர்டிஜிஎஸ் வகையில் அதிகம் நடைபெறுகின்றன. 2019-20 காலகட்டத்தில் 80 சதவீத டிஜிட்டல் பரிமாற்றங்கள் இந்த முறையில் நடைபெற்றுள்ளன. எண்ணிக்கை அளவில் ஐஎம்பிஎஸ் , நெப்ட், யுபிஐ ஆகியவை மூலம் பரிமாற்றங்கள் கூடியுள்ளன. டெபிட் கார்டு மூலம் 35.6 சதவீதமும், கிரடிட் கார்டு மூலம் 21.1 சதவீதமும் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதை ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு கொரோனா நோய்த்தொற்று காலமும் முக்கியமான காரணமாக உள்ளது. இதனால் பெரும்பாலும் வங்கிகளில் செ்ன்று பணம் எடுப்பதை விட அனைத்தையும் மொபைலில் உள்ள செயலிகள் மூலம் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜார்ஜ் மேத்யூ, சந்தீப் சிங்


கருத்துகள்