மதவாத குழுக்களுக்கு கேரளத்தில் எந்த வரவேற்பும் கிடைக்காது! கேரள முதல்வர் பினராயி விஜயன்
பினராயி விஜயன்
கேரள முதல்வர்
உங்கள் இடதுசாரி அரசை மோசமாக காட்சிபடுத்துவதோடு, அதனை பலவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறிவருகிறீர்கள். ஏன் அப்படி கூறுகிறீர்கள்?
எங்கள் அரசு மீதான தாக்குதல் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. அப்போது பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி அரசு வெற்றி பெற்றிருந்தது. ஊடகங்களை விலைக்கு வாங்கிய பாஜக தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கினர். மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மாநில அரசின்போது பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர். என்மீது புகார் கொடுத்தவர் தற்போது அதனை மறுத்துவருகிறார். அவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை.
தங்க கடத்தல் வழக்கு பற்றி முன்னதாகவே பிரதமருக்கு எழுதியிருக்கிறேன் என்று சொன்னீர்கள். வழக்கு விசாரணை எங்கு தவறாகிப்போனதுழ
பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான். தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது என்பது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது. விசாரணை தொடங்குவதற்கு ஆதரவாக நின்றேன். ஆனால் மெல்ல மத்திய அரசின் விசாரணை எங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பிவிட்டது.
நீங்கள் முன்னர் காங்கிரசும், பாஜகவும் கேரளத்தில் ஒரே குரலில் பேசுவதாக சொன்னீர்கள். ஆனால் மேற்குவங்கத்தில் இடதுசாரிகளும் காங்கிரசும் ஒன்றாக இருப்பதோடு, தமிழகத்தில் கூட்டணியில் இருக்கிறீர்களே?
உண்மைதான். அது அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது. பாஜகவும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான். பாசிச கட்சியான பாஜகவை ஆட்டிப்படைக்கும் ஆர்எஸ்எ்ஸ்ஸைப் போல காங்கிரசை எந்த இயக்கமும் இயக்குவதில்லை. காங்கிரஸ் கட்சி தொடக்கத்திலிருந்தே பாஜக, இடதுசாரிகளை எதிர்த்து வருகிறது. பொதுநன்மைக்காக சில சமயங்களில் கூட்டணி ஏற்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில் உங்கள் சாதனை என்று எதனை சொல்லுவீர்கள்?
அடிப்படைக் கட்டமைப்பை எங்களது அரசு 50 ஆயிரம் கோடி ரூபாயில் செய்துள்ளது. நல உதவியாக 600 ரூபாயிலிருந்து 1600 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளோம். மேலும் பொதுமுடக்க காலத்தில் மக்கள் யாரும் பட்டினி கிடக்க வேண்டாம் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். உங்களுக்கே தெரியும் கேரளம் பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்த்தித்து வருகிறது. ஆனால் இதைக் காரணம் காட்டி மக்களுக்கான உதவிகளை நாங்கள் மறுக்கவில்லை.
பாஜக கேரளத்தில் தங்களது கால்களை ஊன்ற தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. குறிப்பாக சபரிமலை விவகாரத்தில். உங்கள் மாநிலத்தில் பாஜக செயல்படமுடியும் என்று கருதுகிறீர்களா?
சபரிமலை விவகாரத்தை எச்சரிக்கையுடன் கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
நாங்கள் அரசியலமைப்புச்சட்டத்தை நம்புகிறோம். அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருதினோம். பொதுமுடக்கத்தில் கூட பல்வேறு கோவில்களுக்கு நாங்கள் நிதியை வழங்கியுள்ளோம். நாங்கள் மக்களின் நம்பிக்கையை மதிக்கிறோம்.
இந்துஸ்தான் டைம்ஸ்
ரமேஷ் பாபு
கருத்துகள்
கருத்துரையிடுக