சூப்பர் ஆட்சியர் சுகாஸ்!



Image result for suhas ias



பெண்களைக் காக்க மறந்த இந்தியா!

பேச்சளவிலும் விளம்பரங்களிலும் 'பேட்டி பச்சாவோ' என இந்திய அரசு கூறினாலும் வல்லுறவு, பாலியல் தாக்குதல், கடத்தல் சம்பவங்களில் இந்தியா முதலிடத்திலுள்ளதாக அண்மையில் வெளியான தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் செய்த ஆய்வு கூறுகிறது. முதலாவதாக இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் ஆப்கானிஸ்தானும், சிரியாவும் இடம்பெற்று அதிர்ச்சியளித்துள்ளன.  

அண்மையில் வெளியான 2016 தேசிய குற்றப்பதிவு ஆணைய(NCRB) அறிக்கையில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருக்கிறது. சைபர் குற்றங்களின் அளவு 6.3% உயர்ந்துள்ளது. இதில் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களின் விகிதம் 32.6%.

பாலியல் வல்லுறவில் டாப் இடங்களில் மத்தியப்பிரதேசமும்(4,882), உத்தரப்பிரதேசமும்(4,816) மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும்(4,189) போட்டா போட்டியிடுகின்றன. இந்தியாவில் குற்ற சராசரியின் அளவு 55.2% என்றால் தலைநகரான டெல்லியில் மட்டும் பெண்கள் மீது அதிகரித்துள்ள குற்றங்களின் விகிதம் 160.4% உயர்ந்து கிறுகிறுப்பு தருகிறது. 2007-2016 காலகட்டத்தில் மட்டும் பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை 83% உயர்ந்துள்ளது அதாவது ஒரு மணிநேரத்திற்கு நான்கு வல்லுறவுகள். வரலாற்று களங்கம் இதுதானோ?  



2
நீர் மிச்சம் பிடிக்கும் குழாய் நாசில்!

நீராதாரங்களை பெருக்குவதைவிட அதனை சேமிப்பது இன்றையகாலத்திற்கு மிக அவசியம். அதற்காகவே எர்த் ஃபோகஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக், அருண் சுப்ரமணியம் ஆகியோர் Quamist கருவியைக் கண்டறிந்துள்ளனர்.

"தனிநபர்கள் மூலம் வீணாகும் தோராய நீரின் அளவு 150 லிட்டர்கள். எங்களது கண்டுபிடிப்பான quamist மூலம் 95 சதவிகித நீரை சேகரிக்க முடியும்" என்கிறார் அருண். ஏறத்தாழ 20 மாடல்களை உருவாக்கி இறுதியாக இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். புதுமைத்திறன் கொண்ட குழாய்முனைக்கருவிகள் 200 விற்றுள்ளன.  

3

ஏசியைக் குறைக்கும் அரசு!

டீசல்,பெட்ரோல், ஜிஎஸ்டி என மக்களின் தினசரி வாழ்வையே கைப்பிடிக்குள் கொண்டுவந்த இந்திய அரசு, தற்போது நம் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் நுழைந்து ஏசியை குறைக்கவிருக்கிறது.

மின்சார சிக்கனத்திற்காக இனி இந்தியாவில் விற்கும் ஏசிகள் அனைத்தும் அதிகபட்சம் 24-26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மட்டுமே இயங்கும். மின்சாரத்துறை அனைத்து மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களும் இது குறித்த அறிவிப்பை அனுப்பிவிட்டது. ஏசியில் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை உயர்த்தும்போதும் 6் சதவிகித மின்சாரம் செலவாகிறது. பெரும்பாலும் ஹோட்டல்கள், ஆபீஸ்களில் உள்ள ஏசிகள் 18-21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயங்குவது இனி சட்டவிரோதம். "இது சரியான முறையல்ல; உடல்நலனுக்கு ஆபத்தானதும்கூட" என்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங். அடுத்து சோறும் ரேஷனில்தான் அளந்து போடுவார்கள் போல போல!
(4,882), உத்தரப்பிரதேசமும்(4,816) மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும்(4,189) போட்டா போட்டியிடுகின்றன. இந்தியாவில் குற்ற சராசரியின் அளவு 55.2% என்றால் தலைநகரான டெல்லியில் மட்டும் பெண்கள் மீது அதிகரித்துள்ள குற்றங்களின் விகிதம் 160.4% உயர்ந்து கிறுகிறுப்பு தருகிறது. 2007-2016 காலகட்டத்தில் மட்டும் பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை 83% உயர்ந்துள்ளது அதாவது ஒரு மணிநேரத்திற்கு நான்கு வல்லுறவுகள். வரலாற்று களங்கம் இதுதானோ?  



4
சூப்பர் ஆட்சியர்!

கேரளாவின் ஆலப்புழாவிலுள்ள தேவி விலாசம் மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளையில் புதுமையான நண்பர் ஒருவர் கிடைத்தார். மதிய உணவை மாணவ மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தியது மாவட்ட கலெக்டர் சுகாஸ் ஐஏஎஸ்தான். மாவட்டத்திலேயே 1,600 மாணவர்கள் படிக்கும் பள்ளி தேவி விலாசம் என்பதால் உணவு சரியாக இருக்கிறதா என திடீர் ரெய்டு நடத்தினார் ஆழப்புழா கலெக்டரான சுகாஸ். முன்பு வயநாட்டில் பணிபுரிந்த சுகாஸ், அங்கு பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை பெருமளவு குறைத்து சாதனை புரிந்தார்.

2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சான சுகாஸ், கலிஃபோர்னியா, மேரிலாண்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தந்து பள்ளிக்கல்வியை ஊக்குவித்த ஆளுமை. வயநாட்டில் வருகைப்பதிவு அதிகம் கொண்ட முப்பது மாணவர்களை தேர்ந்தெடுத்து கொச்சி மெட்ரோவில் ஜாலி ரைடு செய்து அசத்துவது போன்ற உற்சாக ஐடியாக்கள் சுகாஸின் ஸ்பெஷல். வரவேற்கவேண்டிய ஆட்சியர்! 


பிரபலமான இடுகைகள்