தாய்ப்பால் குடித்தால் அழகு கெடும்!



Image result for breastfeeding


இடம்பெயரும் சூழல் அகதிகள்!

போர், வன்முறை, அரசியல் சீர்குலைவுகளால் 68.5 மில்லியன் மக்கள் தாய்நிலத்தை இழந்து சூழல் அகதிகளாக உலகை வந்து வருகின்றனர் என்கிறது ஐ.நா அறிக்கை. இதில் மியான்மர் மற்றும் சிரியா நாடுகள்  50 சதவிகிதத்திற்கும் அதிகமான அகதிகளை உருவாக்கி வருகிறது.

 "அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொள்கைகளை உருவாக்கினால்தான் அகதிகள் பிரச்னையை எளிதாக அணுகமுடியும்" என்கிறார் ஐ.நாவின் அகதிகள் கமிஷனரான ஃபிலிப்பினோ கிராண்டி. 16.2 மில்லியன் மக்கள் கடந்தாண்டு அகதிகளானார்கள் எனில் தினந்தோறும் 44 ஆயிரத்து 500 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள்; அதாவது 2 நொடிகளுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் என தகவல் தருகிறது ஐ.நா அமைப்பு.


சிரியாவில் 6.3 மில்லியன்பாலஸ்தீனத்தில் 5.4 மில்லியன், ஆஃப்கானிஸ்தானில் 2.6 மில்லியன், தெற்கு சூடானில் 2.4. மில்லியன், மியான்மரில் 1.3 மில்லியன் என எகிறிய அகதிமக்கள் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். "ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வருபவர்களில் 85 சதவிகிதம் வறுமையான, நடுத்தர வருமானம் கொண்ட லெபனான், பாகிஸ்தான், உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே" என்கிறார் ஃபிலிப்பினோ கிராண்டி. கடந்தாண்டில் 3.5 மில்லியன் மக்களுக்கு(சிரியா மக்கள் அதிகம்) அடைக்கலம் தந்து முன்னணி இடம் பிடித்துள்ள நாடு துருக்கி


2

ஆக்ரோஷபெண்மணி அட்டாக்!

ஹரியானாவின் பிசியான செக்டார் 9 சாலை. சாலையில் ஆட்டோ ட்ரைவர் சுனில் கட்டாரியா, ஜாலியாக போனில் நண்பர்களுடன் கடலை போட்டுக்கொண்டிருந்தார்.

 பார்க்கிங் வழியை மறைத்து வண்டியை நிறுத்தியபடி பேசியவரை ஸ்கூட்டரில் வந்த சப்னா, "வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க" என்று பொறுமையாக கூறினார். சுனில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அமைதியாக வீட்டுக்குச்சென்று ரிடர்ன் வந்த சுனிலிடம் பேசவில்லை; துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டார். எய்ம் தப்பியதால் உயிர்பிழைத்த சுனில், அடுத்த குண்டுக்கு ரெடியான சப்னாவை பார்த்து பீதியில் அலறிவிட்டார். சுனிலின் புகாரின்பேரில் சப்னாவையும் அவரது கணவரையும் போலீஸ் கைதுசெய்துள்ளது.

3

தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெடும்!

இந்தூரின் மாயக்கெடி நகரிலுள்ள அங்கன்வாடி ஊழியர்களின் நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் "நகர்ப்புற பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெடும் என நினைக்கிறார்கள். இதன்மூலம் குழந்தையின் ஆரோக்கிய விதியையும் உடைக்கிறார்கள்" என பேசி அதிர்ச்சியளித்தார்.

குஜராத்தின் முன்னாள் முதல்வரும், குடியரசுத்தலைவரிடம் தீரச்செயலுக்கான விருதைப் பெற்றுள்ள ஆனந்திபென் படேல், வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றிய அவதூறாக தவறான புரிதலுடன் பேசியது விழாவுக்கு வந்திருந்த பெண்களை சங்கடப்படுத்தியுள்ளது. நகரில் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டையும் பராமரித்து குழந்தைகளைக் கவனித்த பின்னரே பொருளாதார தேவைக்காக அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்லவேண்டும் என பரபரப்பாக கிளம்பி செல்கின்றனர். ஆனந்திபென் படேலின் குற்றச்சாட்டு குடும்பத்தை பராமரிப்பதில் பெண்களின் பங்களிப்பை மறுப்பதாக உள்ளது என இணையத்தில் குபீர் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

பிரபலமான இடுகைகள்