வியட்நாம் ஹிப்ஹாப்!
வியட்நாமில் ஹிப்-ஹாப் ஹிட்!
வியட்நாமின் ஹோசிமின்
நகரில் பெரும் திரளான கூட்டம். அரசியல் சொற்பொழிவுக்காக அல்ல; ஹசார்ட் கிளிக் என்ற மூன்றுபேர் கொண்ட ஹிப்-ஹாப் குழுவினரின்
ஆட்டம் பாட்டம்தான் காரணம்.
மில்லியனியத்தில்
தொடங்கிய ஹிப்-ஹாப் கலாசாரம் 2016 ஆம் ஆண்டு ராப் பாடகர் சுபோய்,
அதிபர் ஒபாமா வருகையின்போது பாட பெரிதும் கவனிக்கப்பட்டது. சிவப்பு பாடல்கள் மட்டுமேயிருந்த நிலைமாறி தற்போது புதிய பாடல்கள் என மேற்கத்திய
தாக்கம் ஹோசிமின் மற்றும் ஹனோய் நகரங்களில்
தென்படுகிறது."ஹிப்ஹாப் வியட்நாமின் வளத்தையும்,
மோசமான வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது" என்கிறார்
ஹிப்ஹாப் பாடகரான அசி. முதலாளி ஒருவரால் கொல்லப்பட்ட விவசாயி
குறித்தும் பாடல் எழுதி பாடும் ஹசார்ட் கிளிக் நாங்கள் காதல் பாடல்களையும் இனிப்பு
தடவிய உண்மைகளையும் உருவாக்க மெனக்கெடுவதில்லை என்கின்றனர். செக்ஸ்,
அரசியல், போதைமருந்துகள் தவிர்த்து பாடல்களை எழுத
எந்த தடையுமில்லை. தற்போது ஹசார்ட்கிளிக், ஜி ஃபேமிலி, வாவி குயென், டட் மெனியாக்,
சன் குயென் ஆகியோர் ஹிப்ஹாப்பில் பெயர்சொல்லும்படி வளர்ந்துவருகின்றனர்.