பேபிம்மாவுக்கு ஓட்டு போடுங்க்!



Image result for actor saptagiri




தாடி மனைவி வேண்டாம்!

சாப்பாடு சரியில்லை, டிரெஸ்ஸிங் சென்ஸ் பிடிக்கலை என சட்டென முடிவெடுத்து டக்கென கோர்ட்டில் அப்பீல் செய்து விவாகரத்து வாங்கும் யூத் கூட்டம் அதிகரித்துவருகிறது. அதில் குஜராத்தை சேர்ந்தவர் புதியவரவு.

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த  குடும்பநல கோர்ட்டில் ஆஜரான இளைஞர் டைவர்ஸூக்கு, மனைவியின் முகத்தில் உள்ள தாடி மற்றும் ஆண்குரல் என மிரட்டல் காரணம் சொல்லியிருக்கிறார். மனைவியின் முகத்தை மூடிவைத்து, சரியாக பார்க்கவிடாமல் பெண்வீட்டார் ஏமாற்றி மேரேஜ் செய்துவிட்டனர் என்ற சிறுபிள்ளைத்தனமாக கணவர் கூறிய காரணத்தையும் கோர்ட் ஏற்காமல் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. ஹார்மோன் பிரச்னைக்கெல்லாம் டைவர்ஸா பாஸ்?  


2
ஆகாயத்தில் கல்யாணமாலை!

லைஃபில் ஒருமுறை நடக்கும் கல்யாணத்தை மறக்கமுடியாதபடி கிராண்டாக கொண்டாடுவது அட்வென்ச்சர் தலைமுறையின் புதிய கலாசாரம். கிழக்கு ஜெர்மனியில் புத்தம்புதிய கல்யாண ஜோடி அந்தரத்தில் தொங்கும் ரோப்காரில் அமர்ந்தபடி கல்யாணம் செய்துள்ளதுதான் டாக் ஆப் தி டவுன்

பூமியிலிருந்து 46 அடி உயரத்தில் நடந்த நிக்கோல் பெக்காஸ், ஜென்ஸ் நார் ஜோடியின் புதுமைத்திருமணம் அது. உயரத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தொங்கிய ரோப்காரில் அமர்ந்த மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பின்னர் கீழிறங்கி பிரெஞ்சு ரக ஆத்ம முத்தத்தை பகிர்ந்தனர். 3 ஆயிரம் மக்களுக்கும் அதிகமானார் இந்த சர்க்கஸ் கல்யாணத்தை வேடிக்கை பார்த்து பூக்களை வீசி வாழ்த்துகளை சொல்லியுள்ளனர். அட்வென்ச்சர் கல்யாணம் ஆசம்!
,
3

பேபிம்மாவுக்கு ஓட்டு போடுங்க!

எம்எல்ஏ, எம்பிக்களை செலக்ட் செய்ய மெனக்கெட்டு க்யூவில் நின்று ஓட்டுபோடும்போது சொந்த குழந்தைக்கு பெயர் வைக்க ஓட்டுபோட்டால் குறைந்தா போய்விடுவோம்? மகராஷ்டிரா தம்பதிகளின் கேள்வி இதுதான்.

மகராஷ்டிராவைச் சேர்ந்த மிதுன், மான்ஸி பாங் தம்பதி, அண்மையில் பிறந்த தங்கள் ஆண்குழந்தைக்கு பெயர் வைக்க முடிவு செய்தனர். எப்படி? Balak Naam Chayan Aayog என்ற பெயரில் எலக்‌ஷன் கமிஷன் போல பேனர் அடித்து ஒட்டி, வாக்குப்பெட்டி தயாரித்துத்தான்.  சொந்தங்களுக்கும் சுற்றத்தாருக்கும் கொடுக்கும் வாக்குச்சீட்டில் மூன்று பெயர்கள் இருக்கும் ஏதேனும் ஒன்றை டிக் செய்து பெட்டியில் போடவேண்டும். இதனை தேர்வு செய்து அறிவிக்க உள்ளூர் எம்எல்ஏவையும் அழைத்து ஆச்சரியப்படுத்திவிட்டார் துணி வியாபாரி மிதுன். பெரும்பாலானோர் வாக்களித்த யுவான் என்ற பெயர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு பிறந்த குழந்தைக்கும் ஓட்டு போட்டு பெயர் வைத்த விநோத ஆசாமிதான் மிதுன்.








பிரபலமான இடுகைகள்