மும்பை குற்றத்தலைநகரமான கதை!


Image result for dawood ibrahim




மும்பை: குற்றத்தலைநகரம்
கிழக்கு பதிப்பக ஆசிரியர்குழு
கிழக்கு
ரூ.80.


மும்பை வணிகம், குற்றம் என இரண்டிலும் உச்சம் தொட்டது எப்படி என கூறுகிறது இந்நூல். முதலில் ரயில்பாதைகளைப் பற்றிய விளக்கங்களாக தொடங்கும் நூல் பின்னர் அப்பாதைகளில் வைக்கப்படும் குண்டுகளால் எப்படி மும்பை கலவரபூமியாகிறது என்பதை துல்லியமாக விளக்குகிறது.

சேலத்தைச் சேர்ந்த வரதராஜ முதலியார், தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜான், ஷகீல் ஆகியோர் குற்றத்தலைநகரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்டவர்கள். இதில் ஒவ்வொருவர் பற்றியும் சிற்சில அறிமுகங்கள் சுவாரசியமாக உள்ளன. குறிப்பாக வரதாபாய் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரின் மாஸ் என்ட்ரி.

தலைநகரமான டெல்லி அரசியல் விளையாட்டுகளில் முன்னணியாக இருந்தாலும் அதனையும் கட்டுப்படுத்தும் சூத்திரதாரிகள் மும்பையின் வணிகர்கள் என்பதை பார்சி, மார்வாடிகள், குஜராத்திகளின் வியாபாரங்கள் மூலம் செவ்வனே விளக்குகிறது ஆசிரியர்கள் குழு. இவை குறித்தவற்றை தனித்தனி நூலாகவும் எழுத முடியும் என்றாலும்  குற்றத்தலைநகரம் நூலில் சிறு அறிமுகமே நம்மை ஈர்க்கிறது.

மும்பை குற்றத்தலைநகரம் என்ற அவலமான பெயரை எப்படி பெற்றது என்றால் அதற்கு முக்கியக்காரணம், கள்ளக்கடத்தல்கள்தான். குறிப்பாக தங்கம். பின்னர் மன்மோகன்சிங் தன் நிதிக்கொள்கை மூலம் அதை உடைத்தாலும் முழுமையாக அதனை கையாளமுடியாத  நிலையில் இந்திய அரசு வணிக சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெருமைக்குரிய புத்தகம் கிடையாது. அதேசமயம் நாம் மறுக்க முடியாத இந்தியாவின் பக்கமும்கூட.

-கோமாளிமேடை டீம்.



பிரபலமான இடுகைகள்