அரசை அச்சுறுத்தும் காஷ்மீர் அறிக்கை!
அரசை அச்சுறுத்தும்
காஷ்மீர் அறிக்கை!
ஐ.நா சபை
காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமைகள் குறித்து வெளியிட்ட அறிக்கையை ஏற்கமுடியாத,
முரண்பாடான தவறான கருத்து என்று கூறி இவ்வறிக்கையை இந்திய அரசு ஏற்க
மறுத்துள்ளது.
இந்தியா மற்றும்
பாகிஸ்தானுக்கிடையிலான அரசியல் உறவு சீர்குலைந்ததால் பல்லாண்டுகளாக காஷ்மீர் மக்கள்
பாதிக்கப்பட்டு வருவதை ஐ.நா மனித உரிமைகள் கமிஷனர்(OHCHR) இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
1989 ஆம் ஆண்டிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, தொன்மை இந்து மக்களும் கட்டாயமாக
வெளியேற்றப்பட்டுள்ளதையும், ராணுவ வீரர்களின் பாலியல் அத்துமீறல்கள்,
வன்முறை, ஒடுக்குமுறைகளையும் இந்த அறிக்கை கவனப்படுத்தியுள்ளது.
மக்களை துன்புறுத்திய, பாலியல் வன்முறை செய்த வீரர்களுக்கு
பதக்கங்களை அறிவிப்பதை விடுத்து சிறப்பு ஆயுதசட்டத்தை ரத்து செய்து பாதிக்கப்பட்டவர்களின்
வழக்குகளை நேர்மையாக விசாரிப்பதே இதற்கான தீர்வு. மக்களுக்கு
ஏற்பட்ட பாதிப்பை உலகிற்கு கூறிய ஐ.நாவின் மனிதஉரிமைகள் அரசு
பாய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல.