மரணங்களில் கற்ற அனுபவ பாடங்கள்!
நூல் முற்றம்!
All That Remains: A
Life in Death
by Sue Black
68 pages
Doubleday
ஃபாரன்சிக் துறையில்
பேராசிரியராக பணியாற்றும் சூ பிளாக், தன் துறையில் தினசரி சந்திக்கும்
வன்முறை, கொலைகள், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றால்
நிகழ்ந்த மரணங்களை அறிவியல் முறையில் விளக்குகிறார்.
சோகமல்ல; புன்னகையுடன் படிக்கும் விதமான எழுத்து
இவரின் பெரும்பலம்.
The Big Ones: How
Natural Disasters Have Shaped Us (and What We Can Do about Them)
by Lucy Jones
256 pages
Doubleday
உலகில் நடைபெற்ற
இயற்கை பேரழிவுகள் கலாசாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றி முன்னாள் நிலநடுக்க
ஆய்வு வல்லுநர் லூசி ஜோன்ஸ் இந்நூலில் விவரிக்கிறார்.
இயற்கை பேரழிவுகள்
பல்வேறு கனிமங்களை,
வளமான மண்ணை, தலைவர்களை, கட்டுமானங்களை, அரசுகளை உருவாக்கியது எப்படி என சுவாரசியமாக
விவரிக்கிறார் ஆசிரியர் லூசி ஜோன்ஸ்.