மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! - இரையைக் கொல்லும் நேரத்தில் நுரையீரலுக்கு கிடைக்கும் பிராணவாயு!

 












மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்!


மலைப்பாம்பு இரையை சாப்பிடும் முறையை அறிந்திருப்பீர்கள். இரையை முழுக்க சுற்றி அதன் எலும்புகளை நொறுக்கி மெல்ல அதனைக் கொன்று உணவாக்கிக்கொள்கிறது. இப்படிக் கொல்லும்போது, இரையின் மீது அழுத்தம் செலுத்துவதோடு, தனது நுரையீரலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. மலைப்பாம்பு  நுரையீரல் அழுத்தப்படும் நிலையில் எப்படி சுவாசிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. 

மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது மார்பு, வயிற்றுக்கு இடையில் உள்ள உதரவிதான தசையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக நீளமான மார்பு பகுதியில் உள்ள தசைகளை சுவாசிக்க பயன்படுத்துகிறது. இரையைக் கொல்லும் செயல்பாட்டில் மலைப்பாம்பின் உடலிலுள்ள இத்தசைகள் இயங்க முடியுமா என ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. தற்போது இதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜான் கபானோ கண்டறிந்துள்ளார். 

மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது சுவாசிப்பதற்கான காற்றை மார்புத் தசைகளில் இறுக்கமற்றதை தனியாக அசைத்து காற்றை உள்ளிழுக்கின்றன. இப்படி இழுக்கும் காற்று இரையை சுற்றி வளைக்கும் உடல் பகுதிகளுக்கும் சீராக செல்கின்றன. “பாம்பு இரையை விழுங்கும் முயலும்போது, உடலுக்கு சரியான அளவில் காற்று கிடைக்கவில்லையெனில் செயலற்று விழுந்துவிடும்” என்றார் கபானோ. 


 


 



Constriction site

Scientific american july 2022

image - Unsplash


கருத்துகள்