கொலைகாரர்களை பின்தொடரும் உளவியல் சக்தி! -ரீலா? ரியலா?
சாட்சிகளின் பிழை
சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை சாட்சிகள் அதிகளவு பயன்பாடு கொண்டவர்கள் கிடையாது. யாராவது இதுபோன்ற லாரியைப் பார்த்தீர்களா என போலீசார் கொலைகார ர் ஒட்டி வந்த வண்டியைப் பற்றி கேட்பார்கள். அதற்கு நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தாலும் அத்தனையும் ஒன்றுபோல பார்த்தேன் சார். ரிவார்டு எப்போ கொடுப்பீங்க என்றுதான் இருக்கும். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை பேர் லாரியைப் பார்த்திருப்பார்கள் என்ற லாஜிக் கேள்வியைக் கேட்டால் அனைத்து விஷயங்களும் அடிபட்டு போய்விடும்.
மேலும் கொலைகாரர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க சொன்னால், இதுபோல இப்படித்தான் இருந்திருக்கும் என குத்துமதிப்பான விஷயங்களை சொல்லுவார்கள். இதை வைத்து என்ன செய்வது? தந்தியில் செய்தியாளர்களை விட்டு குறிப்புகளை கொடுத்து கட்டுரை எழுத வைக்கலாம். அவ்வளவுதான்.
உளவியல் சக்தி
தம்மண்ண செட்டியார் எழுதிய புத்தகத்தை கண்கள் சிவக்க படித்தவர் வேண்டுமானால் கீழ் வரும் விஷயத்தை நம்பலாம். வேறு யாரும் நம்ப மாட்டார்கள். உளவியல் சக்தி கொண்டவர்களை காவல்துறை சில சமயங்களில் பயன்படுத்துகிறது. இவர்கள் கொலை நடந்த இடத்தைப் பார்த்து அமிதா பா என மந்திரத்தை சொல்லி கண்களை மூடி எப்படி கொலை செய்யப்பட்டது. கொலைகாரன் எப்படி என்பதையெல்லாம் கூறுவார். அதை வைத்து காவல்துறை கொலைகார ர்களை தேடும். ஆனால் இதில் பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட கொலை நடக்கிறது என்றால், அதில் நாம் இல்லை என்று கூற முடியாதபடி பதிலை தயாரித்து பேசுவார்கள். காவல்துறை இவர்களை பயன்படுத்த இவர்கள் இலவசமாக கிடைக்கிறார்கள் என்பதே காரணம். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. எல்லோருக்குமே அமானுஷ்ய விஷயங்களில் சற்று ஆர்வம் இருக்கும். அதன்படி உலகிலுள்ள நாடுகளில் காவல்துறை உளவியல் சக்தி என்னிடம் அதிகம் என்று கூறுபவர்களை பயன்படுத்திக்கொள்கிறது.
பாட் ப்ரௌன்
கருத்துகள்
கருத்துரையிடுக