இளம் வயதினருக்கான சிறந்த நூல்கள் - 2018- 2021
2018
சில்ட்ரன் ஆப் பிளட் அண்ட் போன்
டாமி அடியெமி
மேற்கு ஆப்பிரிக்க புனைவை அடிப்படையாக கொண்ட நூல். ஸெலி அடிபோலா என்ற இளம் வயது பாத்திரம்தான் நாயகன். தனது நாட்டிலுள்ள அழிந்துபோன மாயமந்திர சமாச்சாரங்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
2018
டாரியஸ் தி கிரேட் ஈஸ் நாட் ஓகே
அடிப் கொர்ரம்
இரானுக்கு செல்லும் டாரியஸ் கெல்னர், தனது பயணத்தின் வழியே வாழ்க்கையை உணர்வதுதான் கதை. பதற்றம், தனிமைப்படுத்தல், இனக்குழு உணர்வு, அடையாளம் என பல்வேறு உணர்ச்சிகள் நாவலில் உள்ளன.
2019
ஃபிராங்லி இன் லவ்
கொரிய அமெரிக்க மாணவன் ஃபிராங்க் லீ, பள்ளியில் படித்து வருகிறான். அங்கு அவன் வெள்ளை இனப் பெண்ணை காதலிக்கிறான். அவனது பெற்றோர் அவன் கொரியப் பெண்ணை காதலித்து மணக்கவேண்டுமென விரும்புகின்றனர். ஃபிராங்க் இரண்டு கலாசாரங்களுக்கு இடையில் அல்லாடி வாழ்க்கையை தேடி உணர்வதுதான் கதை.
லாரா டீன் கீப் பிரேக்கிங் அப் வித் மீ
மாரிகோ டமாகி
ரோஸ்மேரி வலேரோ ஒ கானல்
பள்ளியில் மிக அழகான பெண் லாரான் டீன்தான். அவள் ஃபிரெடி என்பவனின் பெண் தோழியாகிறாள். அந்த நாள் ஃபிரெடிக்கு முக்கியமானது. ஆனால் லாரா டீனின் மோசமான குணம் அதற்குப் பிறகுதான் அவனுக்கு தெரியவருகிறது. இவர்களின் வினோதமான உறவு கிராபிக் நாவலாக எழுதப்பட்டுள்ளது. படித்து ரசிக்கலாம்.
2019
லைக் எ லவ் ஸ்டோரி
மூன்று இளைஞர்களின் கதை. மூன்றுபேரும் உறவில் இருக்கின்றனர். மூன்று பேர் மூன்று காதல் போல முக்கோண காதல் கதை இது. இதற்கு இடையில் மாற்றுபாலினத்தவர்களின் வழியாக பாத்திரங்களில் ஒருவரின் மாமா எய்ட்ஸால் எப்படி இறக்கிறார் என்பதை அறிந்து வாழ்க்கையை புரிந்துகொள்வதாக கதை செல்கிறது.
2020
தி பிளாக் ஃபிளாமிங்கோ
டீன் அட்டா
கவிஞர், நாடக கலைஞர் அட்டாவின் நாவல் இது. இங்கிலாந்தில் வாழும் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இளைஞன் மைக்கேலின் கதை இது. இவன் தனது அடையாளத்தை மீட்க எப்படி போராடுகிறான் என்பதை உணர்வெழுச்சியுடன் அட்டா விவரித்துள்ளார்.
2020
ஃபெலிக்ஸ் எவர் ஆப்டர்
ஃபெலிக்ஸ் ஊக்கமான உற்சாகமான மாணவன். கலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். கல்வி உதவித்தொகைக்காக முயல்கிறான். அப்போது அவனுக்கு நிறைய குறுஞ்செய்திகள் வருகின்றன. இதை படிப்பவன் அவனது உறவுகளை மீண்டும் பரிசீலனை செய்யத்தொடங்குவதே கதையின் முக்கியமான அம்சம்.
2020
வீ ஆர் நாட் ஃப்ரீ
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சிறையில் மாட்டிக்கொண்ட பதினான்கு ஜப்பானிய அமெரிக்கர்களைப் பற்றிய கதை இது.
2021
ஃபயர் கீப்பர் ஸ் டாட்டர்
குற்றம் சார்ந்த விசாரணைதான் நாவலின் முக்கியமான பகுதி. கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் காதல், கொஞ்சம் கதை என பயணிக்கிற நாவல், ஒருவரின் மரபான அடையாளத்தை தேடுவது நோக்கி செல்கிறது.
டைம் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக