வேட்டையாடுவது எப்படி? சைக்கோ டைரி
இறப்பதே விதி!
ஒருவரை ரத்தம் வெள்ளமாக பீய்ச்சியடிக்கும்படி வேட்டையாடிவிட்டு அதனை நியாயப்படுத்த முடியுமா? சீரியல் கொலைகார ர்கள் அதனை செய்வார்கள். நான் விலைமாதுக்களை கொன்றேன். அவர்கள் தெருக்களில் குப்பைகளாக கிடந்தார்கள். என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சுத்தப்படுத்தினேன் என்று சீரியல் கொலைகார ர் பீட்டர் சட்கிளிப் கூறினார்.
பெண்களை கடுமையாக வெறுப்பவர்கள் அவர்களை வெளிப்படையாக போலீசாரின் விசாரணையில் தேவடியாக்கள் என்று திட்டுவது உண்மை. இதற்கு மதரீதியான ஒட்டுதல் முக்கியமான காரணமாக இருக்கலாம். விலைமாதுக்களை கொல்லும் எண்ணம், அவர்களை எப்படி விதவிதமாக கொன்றார்கள் என்பதைப் பற்றியும் சீரியல் கொலைகாரர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர்.
சிங்கத்தின் வேட்டை
சீரியல் கொலைகார ர்கள் பெரும்பாலும் சுகவாசிகள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேதான் பெரும்பாலான குற்றத்தை செய்வார்கள். அயனாவரத்தில் உள்ளவர், கே.கே. நகர் சென்று குற்றத்தை செய்துவிட்டு வரமாட்டார். அது அவரின் இயல்பான சூழலை கெடுத்துவிடும். கே.கே. நகரிலுள்ளவர்களும் இவன் நம்ம ஏரியாவைச் சேர்ந்தவன் கிடையாதே என சந்தேகம் வந்துவிடும். மயிலாப்பூரில் 12 எக்ஸ் பிடித்தால் தேனாம்பேட்டை ஸ்டாப்பில் இறங்கிவிடுவது போலான தூரம்தான் கொலைக்கான சரியான வேட்டைநிலம்.
பஸ், ரயில் என இரண்டும்தான் சீரியல் கொலைகா ர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது. இதைத்தான் சிலர் கார் வைத்திருப்பார்கள்.
சக்ராகோல்டையும், ஏவிடியையும் கலந்தால் டீ செம ஸ்ட்ராங்காக வருகிறதோ அதைப்போலவே இவர்களும் குறிப்பிட்ட ஏரியாவில் தங்கி அப்படியே கலந்துவிடுவார்கள். அப்போதுதான் கொலை செய்யும்போது யாருக்கும் இவர்களது மீது சந்தேகமே வராது. நல்லபெயர் எடுப்பதும் இதில் முக்கியமானது. சமூகரீதியான பழக்கம் வராது என்றாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலே நிறைய பேருக்கு பிடித்துவிடும்.
தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள். குறிப்பாக கன்றுக்குட்டி சைசில் நாய் வளர்க்காதவர்கள் இருந்தால், அவர்களை தாக்கி கொல்வது, தனியாக இருளில் நடக்கும் பெண்கள், பிறரது ஆதரவின்றி வாழும் பெண்கள் ஆகியோரைத்தான் சீரியல் கொலைகார ர்கள் தாக்குகிறார்கள். பெரும்பாலும் பெண்களின் வீடுகளுக்கு சென்று குற்றத்தை ரசித்து செய்கிறார்கள். பிறகு அ வர்களின் நினைவாக சில பொருட்களை திருடிக்கொண்டு வருகிறார்கள். நிதானமாக கொலையை ரசித்து செய்வதுதான் இதற்கு பின்னாலுள்ள காரணம்.
பாட் ப்ரௌன்
கருத்துகள்
கருத்துரையிடுக