கொலைகாரர்கள் மீது வரும் காதல்!

 








கொலையை நிறுத்த முடியுமா?

அதற்கு வாய்ப்பு குறைவு. ஒருமுறை கொலைகளை கற்பனை செய்து செய்யத் தொடங்கினால் அதனை நிறுத்துவது கடினம். கொலையாளிகளுக்கு உடல்நலக்குறைவு, சிறைக்கு செல்வது, வாய்ப்பு கிடைக்காத து என சில காரணங்கள் மட்டுமே கொலைகளை தடுத்து நிறுத்த முடியும். 

கொலைகளை செய்வதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. கொலைகளை திட்டமிட்டு செய்துவிட்டு உடலை மிகச்சரியாக மறைத்து வைக்க வேண்டும். தடயங்களை அழிக்க வேண்டும். வல்லுறவு செய்து பெண்களை உயிரோடு விடுவதிலும் சிக்கல் உள்ளது. அவர் எங்காவது சென்று உண்மையைச் சொன்னால் உப்புக்கண்டம் போட்டுவிடுவார்களே! இதனால்தான் பெரும்பாலும் வல்லுறவு செய்த பெண்களை கொன்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள். நம்மைப் பற்றி புகார் கொடுத்துவிடுவாளோ என்று எவ்வளவு நேரம் பயத்திலேயே வாழ்வது சொல்லுங்கள். இதனையும் சீரியல் கொலைகார ர்கள் யோசிக்கிறார்கள். இப்படி ஐன்ஸ்டீன் அளவுக்கு யோசிக்கும்போது கொலையின் இடைவெளி கூடலாம். 

கொலைகாரர்கள் மீது வரும் காதல்

உலகமே வெறுக்கும் ஆண்களைக் கூட சில பெண்களுக்கு பிடித்துவிடுகிறது. எப்படி என்று பலருக்கும் தெரியாது. ஆனால் எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி பத்து விரல்களை நீட்டி விரலுக்கொரு காரணங்களை பெண்களால் சொல்ல முடியும். 

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஜெனிலியா போல அப்பாவியாக இருக்கும் பெண்கள் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள். இவர்கள் சிறுவயதில் சீரியல் கொலைகார ர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புதான் அவர்களை மாற்றியிருக்கிறது என நினைப்பார்கள். தங்களது கொலைகார காதலர்கள் அடித்து உதைத்தாலும் கூட அழுதுகொண்டே கிலோ கணக்கில் அவர்களை காதலிப்பார்கள். சிறையில் இருந்தபடியே மணந்துகொண்டாலும் உணர்ச்சிரீதியாக, பொருளாதார ரீதியாக இந்த பெண்கள் சுரண்டப்படும் வாய்ப்பு அதிகம். அதை இவர்களுக்கு எடுத்து சொன்னாலும் கூட புரிந்துகொள்ளும் வாய்ப்பு குறைவு. நான் அவனை மாத்துவேன் என்று மாறாமல் இருப்பார்கள். கர்மா அவ்வளவுதான் என நாம் அடுத்த வேலையைப் பார்க்க போய் விடலாம். 

இரண்டாவது வகை பெண்களைப் பொறுத்தவரை உலகம் நம்மை உற்றுப்பார்க்கணும் என்று நினைப்பார்கள். எனவே, சீரியல் கொலைகார ரை காதலிப்பார்கள். கடிதம் கூட எழுதுவார்கள். எனது தோழி ரேஸ்வீர ரை காதலிக்கிறாளா, நான் சீரியல் கொலைகாரனை காதலிக்கிறேன் என்று சொல்லி பீதியைக் கிளப்புவார்கள். இதன்மூலம் கிடைக்கும் எதிர்மறையான விளம்பரங்களை கூட கையில் குல்பி ஐஸைக் கொடுப்பது போல சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். 

மூன்றாவது பெண்கள், சீரியல் கொலைகார ர்களைப் போலவே மனங்களைக் கொண்டவர்கள். அதாவது இவர்களும் சைக்கோதான். டிசி காமிக்ஸில் ஜோக்கரை காதலிக்கும் பெண்போலத்தான். கொலைகார ர்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்வார்கள். பிறகு அவர் இறந்தபிறகு அவரைப் பற்றியும், கொலைகளைப் பற்றியும் வாந்தி எடுக்கும் அளவுக்கு துல்லியமாக தகவல்களை தொகுத்து நூலாக்குவார்கள். இதுதான் அவர்களை பிரபலமாக்குகிறது. பிறகு அடுத்த சீரியல் கொலைகாரருடன் காதல் உறவு கொண்டு அவர்கள் செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை சேகரிப்பார்கள்..... இது இப்படியே லென்த்தாக சென்றுகொண்டே இருக்கும். 

pat brown

 



கருத்துகள்