கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு!






கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு

உலகில் பத்தில் ஒருவருக்கு கொசுக்கள் பல்வேறு நோய்களை பரப்புவதாக வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இப்போது அதனை முற்றாக அழிக்கும் ஆய்வுகளும் கூட உலக நாடுகளில் நடந்து வருகின்றன. ஆனாலும் கூட இதற்கான முழுமையான தீர்வுகள் நமக்கு கிடைக்கவில்லை. 

பாலூட்டிகள், முதலைகள் என  பல்வேறு விலங்குகளிடமிருந்து ரத்தத்தை கொசுக்கள் உறிஞ்சி எடுக்கின்றன. மனிதர்களை மட்டுமே இப்போது குறிவைத்து தாக்கினாலும் இதற்கு காரணம், பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதுதான்.  இருவாழ்விகள், பாலூட்டிகள், மீன்கள், புழுக்கள் ஆகியவற்றிடமிருந்தும் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி உணவைப் பெறுகின்றன. கூடுதல் போனஸாக விலங்குகளுக்கு பல்வேறு நோய்களையும் பரப்புகின்றன. 

கொசுக்கள் இரவு நேரத்தில் பூக்களின் மீது சென்று அமர்ந்து மகரந்தசேர்க்கைக்கு  உதவுகின்றன என்று பொதுவாக பலரும் கூறுகின்றனர். இதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிகம் கிடையாது என லாரி ரீவ்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.  இதுபற்றிய முழுமையான தகவல் ஸ்மித்சோனியல் இதழில் வெளியாகியுள்ளது. 

கொசுக்களில் மொத்தம் 3500 இனங்கள் உள்ளன. அதில் 200 மட்டுமே கொசுக்களை உணவாக கொள்கின்றன. அதிலும் மூன்று மட்டுமே நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன . எய்டஸ், அனோபிலஸ், க்யூலெஸ் ஆகிய மூன்று கொசுக்கள்தான் இதில் முக்கியமானவை. 

மொத்த கொசுக்களில் 6 சதவீதம்தான் ரத்தத்தை உணவாக கொள்கின்றன. மீதியுள்ளவை தாவரங்களை சார்ந்து வாழ்கின்றன. ஆர்க்டிக் பகுதியில் கோடை காலத்தில் அதிகளவு கொசுக்கள் வெளியாகின்றன. இவை அங்குள்ள பறவைகளுக்கு உணவாகின்றன. இக்கொசுக்கள், நோய்களை பரப்புவதில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

கொசுக்களை முற்றாக அழித்துவிட்டால் டெங்கு, மலேரியா, யானைக்கால் வியாதி பிரச்னையே கிடையாது என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இயற்கையில் அனைத்து உயிரிகளும் முக்கியம். கட்டுப்படுத்துவதை கைவிட்டு அழிக்கத் தொடங்கினால் கொசுக்களின் இடத்தை வேறு பூச்சிகள் பிடிக்கும் என்கின்றனர் சூழலியலாளர்கள். தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றுக்கும் கொசுக்களின் அழிவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். 

கொசுக்களுக்கான வலைகளை கட்டி பாதுகாப்பாக வாழலாம். இல்லை என்றால், மரபணு மாற்றம் செய்து கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். கொசுக்கள் இனப்பெருக்கும் செய்யும் பொருட்களை அகற்றி, இதற்கான மருந்தை அடிப்பது எப்போதும் நாம் காலம்தோறும் செய்யும் மற்றொருவழி. 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்