பொய் சொல்வதை எப்படி கண்டுபிடிப்பது?

 







குற்றத்தை ஒப்புக்கொள்ளுவார்களா?


சாதாரணமாக நாம் செய்த தவறுகளைக் கூட ஈகோ பார்த்து நானா, செய்யவேயில்லையே என கூறுவோம். வேறுவழியின்றி அதனை நிரூபித்தால் இதற்காகத்தான் செய்தேன் என்று கூறுவதுதானே உலக வழக்கம். இந்தவகையில் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை குற்றம் செய்த உணர்ச்சிகள் இருக்காது. காவல்துறையினர் கடுமையாக முயற்சி செய்து தந்திரங்கள் செய்து அவர்களை விசாரணையால் மிரட்டலாம். அதில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தை உணர்ந்தால் அவர்களே நான் தான் கொலைகாரன் என்று ஒப்புக்கொள்வார்கள். அப்படியில்லாதபோது எளிதில் தங்களை காவல்துறையில் ஒப்படைக்க மறுப்பார்கள். 

என்னதான் குற்றங்களை செய்தாலும் கூட காவல்துறை அதில் பெரிய ஈடுபாடு எடுத்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதபோது யாருக்குமே போரடிக்குமே? மேலும் சீரியல் கொலைகார ர்களுக்கு தாங்கள் செய்த பல்வேறு விஷயங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டுமென நினைப்பு வேறு இருக்கும். இதனால் காவல்துறையில் தானாகவே சரண்டர் ஆவது நடைபெறும். இதனால் பெரும்பாலான குற்றவாளிகள் நாடு முழுக்க பரபரப்பான செய்தியாகி பிரபலம் ஆன கதைகளும் உண்டு. 

பொய் சொல்லச் சொல்லாதே

ஒருவர் உண்மை பேசுகிறாரா, அல்லது உண்மை போலவே பொய்யை நெய்கிறாரா என்பதை கண்டுபிடிக்கத்தான் பாலிகிராப் சோதனை நடத்தப்படுகிறது. இதில் பொய் சொல்லும்போது உடல் ஏற்படுத்தும் மாற்றங்களை கணினி பதிவு செய்யும். இதை வைத்து ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்., ஆனால் லை டிடெக்டரை ஏமாற்றும் அளவுக்கு உளவியல் பயிற்சிகளை பெற்றவர்களை இந்த சோதனையில் வெல்ல முடியாது. அவர்கள் பொய்களை உண்மை அளவுக்கு நேர்த்தியாக சொல்லுவார்கள். பொதுவாக ராணுவத்தில் முக்கியமான வீர ர்களுக்கு இந்த சோதனையை செய்து தேர்ச்சி பெறச்செய்கிறார்கள். அப்போதுதான் எதிரிகளிடம் சிக்கினால் கூட உண்மையை சொல்ல மாட்டார்கள். 

பாலிகிராப் டெஸ்ட் எடுப்பவர், சிறந்த விசாரணை அதிகாரியாக இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான சுரீர் கேள்விகளைக் கேட்டு பதிலை வாங்க முடியும். சுமதியின் கொலைக்கு நீ பொறுப்பு ஏற்கிறாயா என்று கேட்பதை விட நீ சுமதியை கொன்றாயா என நேரடியாக கேட்டு விடலாம். சிலர் இந்த சோதனை சரியாக இருக்க முன்னமே சோதனை செய்யப்படுபவரின் ரத்தம், சிறுநீரை எடுத்து சோதிக்கிறார்கள். 







கருத்துகள்