பிரச்னைகளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் வாங்க! யொஹான் கால்டுங்கின் 'தகராறு'

 







தகராறு

யொஹான் கால்டுங்

தமிழில் சுப உதயகுமாரன்

விகடன் பிரசுரம்








அணு உலைக்கு எதிராக போராடிய போராளியான சுப உதயகுமாரன்தான் நூலை அனுமதி பெற்று மொழிபெயர்த்திருக்கிறார். நூலை எழுதியவர் வேறு யாருமல்ல, அவரின் குருநாதர்தான். தந்தி போன்ற சுருக்கமான மொழியை தனக்கு புரிந்தவகையில் விளக்கியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 


தகராறு என்பது என்ன, அதை எப்படி தீர்ப்பது, இதுபற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவது எப்படி, அங்கு நாற்காலிகள், மேசைகள், அலங்காரம் எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பது வரை நூலில் விளக்கமாக பேசப்படுகிறது. கூடுதலாக, எந்தெந்த உலக நாடுகளில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன, அதில் தீர்வு எப்படி கிடைத்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என நிறைய விஷயங்களை கால்டுங் விளக்கி உள்ளார். 


கால்டுங், அமைதி பேச்சுவார்த்தைக்காக பல்வேறு அரசு அமைப்புகளில் இடம்பிடித்த அறிவாளி. ட்ரான்ஸ்சென்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நூலில் மூல நூல் ஆசிரியரின் பகுதிகள் முடிந்தபிறகும் கூட சுப உதயகுமாரன் திருக்குறள் பகுதியை இணைத்துள்ளார். அதுவும் வாசிக்க நன்றாகவே இருக்கிறது. தகராறு சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையை எப்படி அணுகவேண்டும், பேச வேண்டும், கோரிக்கைகளை எப்படி ஏற்பதா, மறுப்பதா, இணங்குவதா என குறள்களை அடையாளம் காட்டி பேசியுள்ளார். 


இன்று உலக நாடுகள் இடையே நிறைய தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை எப்படி அமைதியான முறையில் போரை நாடாமல் தீர்க்கலாம் என்பதை இந்த நூல் கூறுகிறது. அந்த வகையில் இந்நூல் முக்கியமானது. குறிப்பாக, அரசு தீவிரவாத அமைப்புகள் என இரண்டு தரப்புகளிடையே பேச்சுவார்த்தை நடத்த நூலில் உள்ள நிறைய அம்சங்கள் உதவியாக இருக்கலாம். 


கால்டுங், நூலில் தகராறுகளின் வகைகளை விளக்குகிறார். கூடவே உலகளவில் ஏற்பட்ட தகராறுகள் அதை தீர்க்க செய்த அரசின் முயற்சிகள், அதில் கிடைத்த வெற்றி, தோல்வி என அனைத்தையும் அலசியிருக்கிறார். அதெல்லாம் படிக்கவே ஆச்சரியமாக உள்ளன. தகராறுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறும் சில ஆங்கில நூல்களையும் விமர்சித்து சில பத்திகள் உள்ளன. அதை படித்தாலே அடுத்து படிக்கவேண்டிய பேச்சுவார்த்தைக்கான நூல் பற்றி தெளிவு கிடைத்துவிடும். 


அரசியல் பேச்சுகள் நாகரிகமற்று தனிமனித தாக்குதல் என்ற அளவில் தரம் தாழ்ந்துவிட்டன. அதிலும் பெண்கள் என்றால் பேச்சுகள் மிக மோசமாக உள்ளன. அதைக் கவனத்தில் கொண்டால், நூல் நிறைய டிப்ஸ்களை வழங்குகின்றன. கவனமாக சொற்களை தேர்ந்தெடுத்து எப்படி பேசவேண்டும், என்ன கருத்தை வலியுறுத்தவேண்டும், எதிர்த்தரப்பை யோசிக்க வைக்கும் வகையிலான ஆலோசனைகளை வழங்குவது என புதிய சிந்தனைகளை முன்வைக்கிறது. ஜனநாயகம், அகிம்சை, கலந்துரையாடல், பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு நாடுபவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி.



கோமாளிமேடை டீம் 

டெனர்.காம்

https://www.transcend.org/files/Galtung_Book_Theories_Of_Conflict_single.pdf


ohan Galtung is a renowned Norwegian sociologist and the principal founder of the discipline of peace and conflict studies. He is known for his work on the concept of peace and its relationship to conflict, development, and civilization. Galtung’s work has had a significant impact on the field of peace studies and has influenced many scholars and practitioners around the world.

கருத்துகள்