செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பாலின பாகுபாடு உள்ளது!
டாமியன் பேட்ரிக் வில்லியம்ஸ்
damien p williams
நார்த் கரோலினா பல்கலையில் தகவல் அறிவியலாளராக உள்ளார். ஏஐ மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
செயற்கை நுண்ணறிவில் பாகுபாடு உண்டா?
ஏஐக்கு நாம் தரும் தகவல்களைப் பொறுத்துதான் அதன் செயல்பாடு அமைகிறது. அதை வெறும் கணித செயல்பாடுகளை செய்யும் தொழில்நுட்பமாக கருதவேண்டாம். அந்த அமைப்பிற்கு பயிற்சி அளிக்கும்போது கொடுக்கும் தகவல்களில் கவனம் செலுத்தவேண்டும். மனிதர்கள்தான் தகவல்களை ஏஐக்கு வழங்குகிறார்கள். எனவே, அவர்களின் மதிப்பீடுகள், பார்வைக்கோணம், பாகுபாடுகளும் அதில் சேர்ந்துவிடுகிறது.
ஏஐ அமைப்பிலுள்ள பாகுபாடுகள் என்னென்ன?
செயற்கை நுண்ணறிவுக்கு பொதுவெளியில் உள்ள தகவல்களை கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். இதில் அதிகம் கிடைப்பது கருப்பினத்தவர்களின் புகைப்படங்கள்தான். எனவே, குற்றம், தீவிரவாதம் தொடர்பான பிரச்னைகளில் செயற்கை நுண்ணறிவு கருப்பினத்தவர்களை குற்றவாளி என அடையாளம் காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் கருப்பினத்தவர்களின் பெயர்களை ஏஐ தவிர்க்கிறது. தகுதி இருந்தாலும் புறக்கணிக்கிறது. இதில் வேலை தருபவர்களின் இனவெறி மனநிலையும் முக்கியமானது.
மாற்றுத்திறனாளிகளுக்காக உழைத்து உரிமைகளைக் காக்க முயன்று வருகிறீர்கள். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ன?
அமெரிக்காவில் மாற்றுதிறனாளிகள் நலன்களைப் பெற தானியங்கி ஏஐ வசதிகளைத்தான் நீங்கள் நாட வேண்டும். அதிலும் சரியான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. மாற்றுத்திறனாளிகள் அரசின் நிதியுதவி இன்றி வீட்டில் இருந்தால் அவர்களுக்கான எந்த பதில்களும் இல்லை. மற்றபடி மருத்துவமனை, குறிப்பிட்ட அமைப்பின் வழியாக பராமரிப்பவர்கள் பற்றித்தான் தகவல்கள், வழிகாட்டுதல்கள் உள்ளன.. வருமானமின்றி, மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களின் வருமான வாய்ப்பு பற்றி ஏஐ என்ன நினைக்கிறது, எப்படி புரிந்துகொள்கிறது என விளங்கவில்லை.
பாகுபாடுகள் ஆழமாகிவிட்டதாக கூறுகிறீர்களா?
மாற்றுத்திறனாளி எப்படிப்பட்ட ஊனத்தை அடைந்துள்ளார் என மனிதர் ஒருவர் இருந்தால் புரிந்துகொள்ள முடியும், தகவல்களால் பயிற்சி பெற்ற ஏஐ அதை எப்படி அறிந்து நிவாரணத்திற்கு வழிகாட்ட முடியும்? இதுபோன்ற உதவிகளை வழங்கும் இடத்திற்கு தேவை மனிதர்கள்தான். எந்திரம் அல்ல.
நிஜ வாழ்க்கையில் பாலின பாகுபாடு எப்படியுள்ளது?
நான் ஒருமுறை கூகுள் பார்டில் நிறுவன தலைவர், இயக்குநர், உதவியாளர், செவிலியர், ஆசிரியர் ஆகிய பணிகளை உள்ளிட்டேன். அதற்கு கிடைத்த பதில்கள் அதிர்ச்சியூட்டுபவையாக இருந்தன. ஆசிரியர், செவிலியர், உதவியாளர் பணிகளுக்கு பெண்களின் படங்கள் காட்டப்பட்டன. இதன் அளவு 70 முதல் 85 சதவீதம் வரை. நிறுவனத்தலைவருக்கு பெண்ணைக் காட்டவில்லை. ஆணை விட பெண் திறமையாக இருந்தாலும் பாலின பேதம் காரணமாக ஆணிடமே சிலர் சென்று கோரிக்கைகளை கூறி நிறைவேற்றிக்கொள்வது போலவே உள்ளது. முன்முடிவுகள், பாலின பேதங்கள் செயற்கை நுண்ணறிவிலும் உள்ளது.
டைம்
டீப் பேக், போலியான தகவல்கள், குரல்களை நகல் செய்வது ஆகியவற்றின் வழியாக பல்வேறு மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறலாம். ஏற்கெனவே விலைக்கு வாங்கப்பட்ட குறுஞ்செய்தி தளங்கள் மூலம் போலிச்செய்திகள் மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களின் மூளை சலவை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மத அடிப்படைவாத, நவதாராளவாத சக்திகள் சிறப்பாக பயன்படுத்தி பயன் கண்டு வருகின்றன.
DAMIEN WILLIAMS
Education: Ph.D. Science, Technology, and Society, Virginia Tech; MS Science, Technology, and Society, Virginia Tech
Courses Taught: Modeling and Society DTSC 2301/2302
Biography:
Damien Patrick Williams is an assistant professor in Philosophy and Data Science at the University of North Carolina at Charlotte. A Ph.D. in Science, Technology, and Society, from Virginia Tech in the United States, Damien researches how technologies such as algorithms, machine intelligence, and biotechnologies are impacted by the values, knowledge systems, philosophical explorations, social structures, and even religious beliefs of human beings. He is especially concerned with how the knowledge and experience of marginalized people affect the technosocial structures of human societies.
கருத்துகள்
கருத்துரையிடுக