சதுரங்கம் ஆடும் போர்வீரன் - இநூல் வெளியீடு
சீன நாட்டின் அதிபரான ஷி ச்சின்பிங், வறுமை ஒழிப்பு, இணைய
பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, சீனக்கனவு, வெளிநாட்டு வணிகம் தொடர்பாக பேசிய
இருபது உரைகளைக் கொண்ட நூல் இது. இந்த உரைகளின் வழியாக மக்களுக்கு எளிமையாக
கூறவரும் செய்தியை எப்படி எடுத்துச்சொல்கிறார், அதன் வழியாக
எதிர்பார்க்கும் விஷயங்களையும் நிதானமாக எடுத்து வைப்பதைக் காணலாம். இளம்
வயதில் கட்சி உறுப்பினராக இருக்கும்போதே மக்கள் பிரச்னைகளைப் பற்றி உள்ளூர்
நாளிதழில் 232 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஷி. பிரச்னைகளை தீர்வுகளை
நோக்கி மக்கள் விவாதிக்கும்படி நகர்த்தினார். இக்கட்டுரைகளை வாசித்த
மக்கள், அதன் எளிமையான வடிவத்தையும், பிரச்னைகளை பேசும் முறையையும்
பாராட்டினர். இப்படி மக்களுக்காக செய்த செயல்களின் வழியாக மக்களின்
செயலாளர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்த நூலை வாசிக்கும் ஒருவர்
மக்களை நேசிக்கும் தலைவர், என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்கிறார்.
நாட்டை முன்னேற்ற விரும்புகிறவர், எந்தெந்த அம்சங்களில் கவனம்
செலுத்தவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சர்வாதிகார நாடு,
ஒற்றைக்கட்சி ஆட்சிமுறை என சர்ச்சைகள் சுழன்றாலும், சீனாவின் ஆட்சித்தலைவர்
மனதில் என்ன நினைக்கிறார், அவரது எதிர்கால நோக்கம் ஆகியவற்றை உரைகளின்
வழியாக ஒருவர் அறிய முடியும்.
நூலை வாசிக்க....
கருத்துகள்
கருத்துரையிடுக