பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி!

 

 

 

 



 

 

 

 


பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி!

தொங்கலா பண்டி
அல்லரி நரேஷ், தன்யா

அல்லரி நரேஷின் படங்கள் அனைத்துமே வேடிக்கையான வேறு உலகில் நடப்பவை. சின்ன பட்ஜெட் படம் என்பதால், கதை ஆந்திரப் பிரதேசத்தில்  நடக்கும் பாடல்கள் மட்டுமே வெளிநாடுகளில் காட்சிபடுத்தப்படும். அதேதான் இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார்கள்.

கதையைப் பார்ப்போம்.

மூன்று திருட்டு நபர்களின் வாரிசுகள் ஒன்றாக கூடி தங்களது தாத்தா சேகரித்து வைத்த பொக்கிஷங்களை எப்படி கையகப்படுத்துகிறார்கள் என்பதுதான் கதை.

பொக்கிஷங்களை தேடிச்செல்லும் கதை என்றால், புனைவாக அழகாக புதிர்களை வைத்து உருவாக்கியிருப்பார்கள் என நினைத்தீர்களா? அப்படியெல்லாம் கிடையாது. அனைத்துமே எளிமையாக நரேஷின் காமெடி டைமிங்கை வைத்து நடந்தேறுகிறது.

நாயகன் ஒரு திருடன், அவன், அவனது மாமா, மாமா பிள்ளை என வம்சமே திருடர்கள். இதுபோலவே இன்னொரு பெண்கள் குழு இயங்குகிறது. அதற்கு கோவை சரளா தலைவி. அவரின் இரு தங்கைகளில் ஒருவரே நாயகி.

நாயகியை இருமுறை கட்டிப்பிடித்தே காதல் வர வைக்கிறார் நாயகன். காதல் வந்தபிறகு எப்படி புரட்டி எடுக்கிறார்  என்பதை யூட்யூபில் தட்டிப் பார்க்கலாம். மூலக்கதையைப் பார்ப்போம்.

நவாப், தனது சமஸ்தானத்தை இந்திய அரசில் இணைக்கிறார். ஆனால் செல்வத்தை தனக்கென பதுக்கி வைக்கிறார். அதற்கு தளபதி கூட்டிச்சென்ற மூன்று ஆட்களுமே திருடர்கள். அவர்கள் தளபதியை அடித்துப் போட்டுவிட்டு பொக்கிஷத்தை அபகரிக்கிறார்கள். பொக்கிஷ இடத்தை மேப்பில் வரைந்து மூன்று துண்டாக்கி வைத்துக்கொள்கிறார்கள். மூன்று பேர்களும் இணைந்துதான் பொக்கிஷத்தை எடுக்க முடியும். இறுதியாக அவர்கள் காட்டுக்கு சென்று செல்வத்தை எடுக்கவே முடிவதில்லை. இறந்துபோகிறார்கள். இப்போது அவர்களி்ன் வாரிசு முறை.
அவர்களின் வம்சாவளி பொக்கிஷத்தை அடைய திட்டமிடுகிறது. இந்த நிலையில் தளபதியின் உறவினர்களும் அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள்.  இக்குழுவில் உள்ள அனைவருக்குமே தங்களது குடும்பம் மட்டுமே பொக்கிஷத்தை அடைய வேண்டும் என நினைக்கிறார்கள். தடைகளைக் கடந்து சென்று பொக்கிஷங்களை அடைந்தார்களா இல்லையா என்பதே கதை.

கதையின் முடிவு பற்றி பெரிதாக யோசனை ஏதுமில்லை. ஏனெனில், நாயகன் வெல்வார் என்பது தெரிந்ததுதானே. நாயகன் செய்யும் நகைச்சுவைதான் படத்தின் பலம். காட்டுக்குள் சென்றபிறகு நகைச்சுவையும் முற்றாக வற்றிவிடுகிறது. அங்கு வரும் பழங்குடி காட்சிகள் அனைத்துமே வெறுப்பேற்றுகின்றன. இறுதியாக ஒரே காட்சிக்கு மட்டும் பிரம்மானந்தம் வந்து ஆறுதல் தருகிறார். ஆனால் அவராலும் கூட படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

பாடல்கள் பற்றி நாயகன் அல்லது வேறு யாராவது ஒருவர் முன்னமே கூறுகிறார்கள். ஒருமுறை சொன்னால் பரவாயில்லை. அனைத்து பாடல்களுக்கும் அதே ட்ரிக் என்றால் தாங்காது ப்ரோ?
வேணுமாதவின் காதலியை , நாயகனின் உறவினர்கள் திட்டமிட்டு கட்டிப்போட்டு கட்டிப்பிடிக்கும் காட்சியை காமெடி என்று காட்டியிருக்கிறார்கள். அதற்கு அவரை கேங் பேங் செய்வதாக கூட காட்டித் தொலைத்திருக்கலாம். அந்தக் காட்சி அந்தளவு மோசமாக உள்ளது. இதெல்லாம் காமெடியா? என்ன அடிப்படையில் இயக்குநர் எழுதினாரோ தெரியவில்லை. படுமோசம்.

அபத்தம்

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்