கலங்கரை விளக்கத்திற்கு ஒளியேற்றியவருக்கு இயற்பியல் நோபல் பரிசு!

 


 

கலங்கரை விளக்கத்திற்கு ஒளியேற்றியவருக்கு இயற்பியல் நோபல் பரிசு!

விருது என்பது எதற்கு கொடுக்கப்படுகிறது? செய்யும் பணியில் பிரம்மிக்கத்தக்க வகையில் சாதனை செய்த காரணத்திற்காக... ஆனால், காட்சி ஊடகங்கள் விருது என்பதை தாம்பூலப்பை போல மாற்றிவிட்டன. இதனால் ஊரில் ஏராளமான பாப்புலிச பைத்தியங்கள், பேன்சி ஸ்டோரில் மரம், பிளாஸ்டிக் என எதில் செய்த விருதுகளையும், பதக்கங்களையும் வாங்கி வீதியில் போவோர் வருவோருக்கெல்லாம் பிடிங்க சார் முதல்ல என்று வீடியோ எடுத்து யூட்யூபில் போட்டு வருகிறார்கள். நோபல் அகாடமியும் முதலில் அப்படித்தான் இருந்தது. அதற்கு ஒரு உதாரணம்தான். ஸ்வீடன் நாட்டு பொறியாளர் நீல்ஸ் குஸ்டாஃப் டாலன்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் எத்திலீனை விளக்குக்கு பயன்படுத்தி வந்தனர். அப்போது எரிபொருளை குறைக்கும் விதமாக பொறியாளர் டாலன் ஒரு முறையைப் பயன்படுத்தினார். 1907ஆம் ஆண்டு கருப்பு, வெள்ளை உலோகங்களைக் கொண்டு சோலார் வால்வ் ஒன்றை அமைத்தார். இதற்காக அவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதில் இன்னொரு நகைச்சுவை என்னவென்றால், பரிசு வழங்கப்பட்டபோது மின்சாரம் சாதாரண விளக்குகளை மடைமாற்றத் தொடங்கியிருந்தது. 1871ஆம் ஆண்டு, மின்விளக்கு கொண்ட கலங்கரை விளக்கம் உருவாகி இயங்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அகாடமி அதைப்பற்றி கவலைப்படவில்லை. நம்மூரைச் சேர்ந்த பயலுக்கு விருது தந்தே ஆகவேண்டும்.. அம்புட்டுத்தேன் என உறுதியாக நின்றுவிட்டது. அன்று தனியாக நோபல் கமிட்டி அமைக்கப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. அரசரின் அறிவியல் அகாடமி விருதை டாலனுக்கு வழங்கி கௌரவித்தது.

விமர்சனம் செய்யப்படும்போது அல்ல. கேலி கிண்டல் செய்யப்படும்போதுதான் விவகாரம் பெரிதாக மாறுகிறது. டாலனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது. அந்தோ பரிதாபம்...

 
Nils Gustaf Dalén was a Swedish Nobel laureate and industrialist, engineer, inventor and long-term CEO of the AGA company and inventor of the AGA cooker and the Dalén light. Wikipedia

Born: 30 November 1869, Stenstorp, Sweden
Died: 9 December 1937 (age 68 years), Lidingö kommun, Sweden
Spouse: Elma Persson (m. 1901)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்