நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள்

 

 

 



 

 

நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள்

ஏரோஸ்ட்ரோவிலோஸ்

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், மைக்ரோ கேஸ் டர்பைன்களைத் தயாரித்து வருகிறது. கழிவுப்பொருட்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வித எரிபொருட்களை கேஸ் டர்பைன்கள் பயன்படுத்தி இயங்குவதாக வடிவமைத்துள்ளனர்.

வாகனத்துறைக்கான டர்பன்களைத் தயாரித்த நிறுவனம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. தற்போது ஜெனரேட்டர்களுக்கான பகுதிப்பொருட்களைத் தயாரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட ஏரோஸ்ட்ரோவிலோஸ், மைக்ரோ கேஸ் டர்பைன்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர்கள், ரோகித் குரோவர், பிரதீப் தங்கப்பன்,சத்யநாராயணன் சக்ரவர்த்தி. பெற்ற முதலீடு, 0.5 மில்லியன் டாலர்கள்.

பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்

2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. நிறுவனர்கள், ரோகன் கணபதி, யாஸ்காஸ் கரணம், விண்வெளி போக்குவரத்து, விண்வெளி டாக்சி ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தற்போது வரை 11.3 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றிருக்கிறார்கள்.

2024ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழ் தலைமைத்துவ விருதை வென்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இது.  கடந்த ஜனவரியில் ஆர்கா, ருத்ரா என்ற புரபல்சன் அமைப்பை உருவாக்கி வெளியிட்டனர். ருத்ரா புரபல்சன் வசதி, இருப்பதிலேயே குறைவான மாசுபாடு கொண்டது.  பெங்களூருவில் பெரிய தொழிற்சாலையை அமைக்க நிதி முதலீட்டை தேடி வருகிறார்கள். பத்து கிலோ முதல் ஐயாயிரம் கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் நான்கு வகை எஞ்சின்களை சோதித்து வருகிறார்கள்.

ப்ளூஜே ஏரோ

2022ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம். நிறுவனர்கள், மாருதி அமர்தீப் ஶீ வஸ்தவா, உத்தம்குமார் தர்மாபுரி.
ஹைட்ரஜனை அடிப்படையாக கொண்டு இயங்கும் ட்ரோன்கள், வணிகரீதியான விமானங்களை தயாரிக்க முயன்று வருகிறார்கள். இதுவரை கிடைத்த முதலீடு 2.25 மில்லியன் டாலர்கள்.

வணிகரீதியான ட்ரோன்கள், சரக்குபோக்குவரத்திற்கான விமானங்களை ஹைட்ரஜனில் இயங்கும்படி அமைப்பதே நோக்கம். அதற்கான மாதிரியையும் உருவாக்கிவிட்டனர். ப்ளூஜே ரீச் என்ற கலப்பு ஹைட்ரஜன் புரபல்சன் அமைப்பை உருவாக்கி அதை 2026இல் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டு உழைத்து வருகிறார்கள்.

சின்எல்ஆர்

தொழிற்சாலைகளுக்கு ஏற்ற ரோபோட்டுகளைத் தயாரித்து விற்பதே நோக்கம். 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கிய நிறுவனம். நிறுவனர்கள் நிகில் ராமசாமி, கோகுல் என்ஏ. இதுவரை 5.3 மில்லியன் டாலர்களை நிதியாக பெற்றிருக்கிறார்கள். ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்விட்சர்லாந்தில் இரு மையங்களை அமைக்கவிருக்கிறார்கள்.

ஃபோர்ப்ஸ் இந்தியா

#cynlr #cyro #robots #startup #bluj aero #hydrogen #evtol #aircraft #research #bellatrix aerospace #leadership #isro #aerostrovilos #microgas turbines #forbes india #harichandan arakali


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்