ப்ரீடெர்ம் (preterm) குழந்தைகள் இறப்பு!
மருத்துவம்
ப்ரீடெர்ம் என்றால் என்ன?
தாயின் வயிற்றிலுள்ள குழந்தை 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறப்பதை ப்ரீடெர்ம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் குழந்தைகள் உயிரோடு இருந்தாலும், அவர்களை பாதுகாப்பது நெடிய போராட்டமாகவே இருக்கும்.
குழந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறப்பது ஆபத்தானது. அதில் சில பிரிவுகள் உள்ளன.
அதீதம்
இருபத்தெட்டு வாரங்களுக்கு குறைவாக பிறப்பது
அபாயம்
இருபத்தெட்டு வாரங்களில் பிறப்பது.
மத்திமம்
முப்பத்தி இரண்டு அல்லது முப்பத்து ஏழு வாரங்களில் பிறப்பது
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கணக்குப்படி 13.4 மில்லியன் குழந்தைகள் முழுமையாக பிரசவகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பிறந்துள்ளன. அதாவது பத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது.
2019ஆம் ஆண்டு மட்டும் ஒன்பது லட்சம் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து பிறப்பு சிக்கல்களால் இறந்து போயுள்ளன.
காரணம் என்ன?
அடுத்தடுத்த கர்ப்பங்கள், குழந்தை திருமண கர்ப்பம், நோய்த்தொற்று, நீரிழிவு, ரத்த அழுத்தம், மரபணு பிரச்னைகள், மோசமான ஊட்டச்சத்து நிலை
கருத்துகள்
கருத்துரையிடுக