2021 இல் இப்படி சொன்னார்கள்! - அரசியல், கிரிக்கெட், தொழில், சமூக வலைத்தளம், மருத்துவம்
பிப்ரவரி 1
இப்போது விராட் அணியின் தலைவராக இருக்கிறார். நான் துணைக்கேப்டன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பின்புற இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறேன்.
ரகானே
இந்திய கிரிக்கெட் வீரர்
மார்ச் 8
இருபது இந்திய நிறுவனங்கள் மட்டுமே நூறுகோடிக்கும் மேல் மதிப்பு கொண்டவையாக உள்ளன. இவர்கள் எப்படி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்டு போராட முடியும்? அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்?
விஜய் சேகர் சர்மா
நிறுவனர், இயக்குநர் பேடிஎம்
மார்ச் 29
அடையாள அரசியல் இங்கே எப்போதும் உள்ளது. இதில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். மேற்கு வங்கத்தில் தலித்துகள் பங்களிப்பு முக்கியமானது. அவர்களே இம்முறை முக்கியமானவர்கள்.
பிரசாந்த் கிஷோர்
அரசியல் நிலைப்பாட்டாளர்
ஏப்ரல் 5
மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். இதற்கான கொள்கைகளை வகுத்து கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாதபோது என்ன செய்வது என திட்டம் வகுப்பது முக்கியம்
ரந்தீப் குலேரிலா
எய்ம்ஸ் இயக்குநர்
ஏப்ரல் 26
அனைத்து கட்சிகளும் தவறு செய்பவர்கள்தான். நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம். தீதியின் மீதுள்ள நம்பிக்கை எங்களைக் காப்பாற்றும்.
டெரக் ஒ பிரையன்
மாநிலங்களவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்
ஜூலை 26
டெக் நிறுவனங்களின் ஆற்றல் அதற்கு எதிரான அரசின் கொள்கை பற்றியும் உரையாடல் நடக்கலாம். ஆனால் இதுபற்றிய விவாதங்கள் தினசரி நடைபெறக்கூடாது.
அஜித் மோகன்
நிர்வாக தலைவர், ஃபேஸ்புக் இந்தியா
ஆகஸ்ட் 2
காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அமைவது கடினம். திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இணைவது அவசியம். ஆணவத்தைக் கைவிட்டு நாம் ஒன்றாக செயல்படவேண்டும். இப்போதே தாமதம் ஆகிவிட்டது.
நவம்பர்
நாங்கள் இப்போது வேகமாக நோய்த்தொற்று ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். கேரள அரசு, கொரோனா தொற்று பற்றிய வழக்குகளை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்து வருகிறது. நாட்டிலேயே நாங்கள் கொடுக்கும் தகவல் அறிவிப்பு சிறந்தவை.
வீணா ஜார்ஜ்
சுகாதாரத்துறை அமைச்சர், கேரளா
டிசம்பர் 20
நான் எடுத்த பத்து விக்கெட்டுகள் எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டன.
அஜாஸ் படேல்
இடதுகை சுழற்பந்து வீச்சாளர், நியூசிலாந்து
டிசம்பர் 29
ஒன்றிய அரசின் கொள்கைகளை சட்டமாக்குவதற்கான ரப்பர் ஸ்டாம்பாக நாடாளுமன்றம் மாறிவிடக்கூடாது
சசி தரூர்
காங்கிரஸ் தலைவர்
கருத்துகள்
கருத்துரையிடுக