தெரு நாய்களைப் பராமரிக்கும் மருந்துகடை உரிமையாளர்!

 









ஜெய்ப்பூரைச் சேர்ந்த வீரென் சர்மா பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் கால்நடை, செல்லப்பிராணிகளுக்காக மருந்துக்கடை நடத்துகிறார். அதையும்கூட இவர் தொடங்கவில்லை. சர்மாவின் தாத்தா 1957இல் தொடங்கியதை அப்படியே பின்தொடர்கிறார். அப்போது எதற்கு நாம் இவரைப் பற்றி பேசுகிறோம்? 

தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார். அதற்காகத்தான். 2000இல் நாய்க்குட்டிகளை வணிக ரீதியாக விற்கத் தொடங்கினார். முதலில் தெருவில் இருந்த நான்கு குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தவர், உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். பிறகு பார்த்தால், அவரது மருந்துக்கடை முழுக்க நாய்களை தத்து எடுக்க நிறைய பேர் வந்துவிட்டனர். இப்படித்தான் தெருவில் இருக்கும் நாய்க்குட்டிகளை வளர்க்க நிறைய பேர்  உருவாகியிருக்கிறார்கள். இந்த வகையில் 2500 நாய்க்குட்டிகளுக்கு புதிய வளர்ப்பு பெற்றோர் கிடைத்துள்ளனர். 

பொதுமுடக்க காலத்தில் வாரம்தோறும் சனியன்று நூறு நாய்களுக்கு உணவளித்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து 1200 நாய்களுக்கு சென்றிருக்கிறது. நாய்க்குட்டிகளை பிறருக்கு வளர்க்க கொடுக்கும்வரை அதற்காகும் செலவுகளைப் பார்த்தால் தலையே சுற்றும். தடுப்பூசி, உணவு, மைக்ரோசிப் பொருத்துதல் ஆகியவற்றுக்கு மட்டும் ரூ.3,750 ரூபாய் ஆகிறது. அதாவது இப்போது சொன்ன கணக்கு ஒரு நாய்க்குட்டிக்கு மட்டுமே. 


இதுவரை 12 ஆயிரம் நாய்க்குட்டிகள் பற்றிய தகவல்களை வைத்திருக்கிறார். மாதம் 200 நாய்க்குட்டிகளை பிறருக்கு வளர்க்க கொடுத்து வருகிறார். நாயை வளர்க்க கொடுப்பதோடு அதனை கண்காணிக்கவும் இவரது குழு உழைக்கிறது. மாதம் தோறும் அதனைப் பார்த்து வரும் வேலையையும் செய்கிறது சர்மா குழு. 


இந்தியா டுடே 





கருத்துகள்