புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் ஜெயமோகன்! - எழுதுக - ஜெயமோகன்

 




எழுதுக - ஜெயமோகன்


எழுதுக

ஜெயமோகன்

தன்னறம் நூல்வெளி


கவிதை, கட்டுரை, புனைவு ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றும். இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியாது. இப்படி இருப்பவர்கள், பின்னாளில்  தொழில் சார்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் உள்ள  இலக்கிய ஆசை மெல்ல மங்கி மறைந்துவிடும். 

ஜெயமோகன், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டுதான் இலக்கிய வேலைகளையும் செய்தார். அவர் தனது வாழ்க்கையில் இலக்கியத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதனால் தொழில்சார்ந்த வாழ்க்கையில் பதவி உயர்வு, அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் இலக்கியத்தில் சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக உள்ளார். 

யாருக்குமே தொடக்க காலத்தில் எழுதும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அப்படி ஜெயமோகன் தளத்தில் கேள்வி கேட்டவர்களில் சிலரை தேர்வு செய்து, அதற்கு பதிலளித்து அதனை நூலாக தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது ஒருவருக்கு எழுத்து தொடர்பான சந்தேகங்கள் ஓரளவுக்கு குறையும். தீரும். 

எழுத்து தொடர்பாக சில பழக்கங்களை ஜெ. பின்பற்றுகிறார். அதனைக் கூறும்போது, பிறருக்கு அது பொருந்தாது என்றும் கூறிவிடுகிறார். எழுத்து தொடர்பான விதிகளை நமக்கு நாமேதான் உருவாக்க வேண்டும். எழுதுவதற்கான மனநிலையை  அடைவது, தேக்கநிலை, செயலின்மை, தன் மீட்சி ஆகியவற்றை ஜெயமோகன் சிறப்பாக விளக்கியிருக்கிறார். 

எனவே, தன்னிரக்கத்தின் மூலம் மெல்ல ரசிப்புத்தன்மைக்கு சென்று அதை ரசிக்கும் நிலை ஆபத்தானது. ஒரு கட்டத்தின் எழுதுபவர்கள் இதில் சிக்கிக்கொள்ள நேரும் என்பதை ஜெ. எச்சரிக்கிறார். வாசிப்பது, எழுதுவது, குறிப்பிட்ட இடங்களுக்கு பயணிப்பது, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக எழுதுவது என நூலில் நிறைய வழிகளை சொல்லுகிறார். .அவை படிக்க நன்றாக இருக்கிறது. வாசகர்கள் எழுத முயலும்போது அவற்றையும்  கடைபிடிக்கலாம். 


கோமாளிமேடை டீம் 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்