இஸ்ரேலை மிரட்டும் நிழல் கமாண்டோ தலைவர்! - மொகம்மது டெய்ப்
பாலஸ்தீனியர்களை காக்கும் தலைவன்!
மொகமது டெய்ப்
மே மாதத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய நாட்டு உச்சநீதிமன்றம், கிழக்கு ஜெருசலேமிலுள்ள ஷேக் ஜர்ராவிலுள்ள பாலஸ்தீனிய குடு்ம்பங்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது. இஸ்ரேலிய அரசுக்கு மகிழ்ச்சி என்றாலும் உடனே அதன் எதிரிகளில ஒன்றிடமிருந்து உடனே எச்சரிக்கை வந்தது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவான இஷ் அட் தின் அல் க்வாசிம் படைத்தலைவர் மொகம்மது டெய்ப்தான் அந்த எச்சரிக்கையை செய்தார்.
பொதுவாக பாலஸ்தீனியர்கள் மொகம்மதை வெளியிடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள், மேலும் இதுபோல வெளிப்படையாக எச்சரிக்கையையும் அவர் செய்த்து. இல்லை. பாலஸ்தீனியர்களை வெளியேற்றினால் இஸ்ரேல் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என மொகம்மது தனது எச்சரிக்கை செய்தியில் கூறியிருந்தார். . பாலஸ்தீன மக்களே பல்லாண்டுகளாக பார்க்காத நிழல் தலைவர்தான் மொக்ம்மது. அவரின் செய்தி வெளியானவுடன் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் ஷேக் ஜர்ராவில் புரட்சி போராட்டத்தைத் தொடங்கினர். மே 10 அன்று அங்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்சா மசூதியை முற்றுகையிட்டது. அவர்களை அங்கிருந்து விலகச்சொல்லிய ஹமாஸ் ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவத் தொடங்கியது. பின்னர் இஸ்ரேலும் கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்த தெம்பில் அதிநவீன ஆயுதங்களை வைத்து பாலஸ்தீனியர்களை தாக்கத்தொடங்கியது.
மொகமது டெய்ப்பை கொல்ல இஸ்ரேல் இதுவரை இரண்டு முறை முயன்று தோல்வி கண்டுள்ளது. இதற்கான ஹிட் லிஸ்டில் அவரது பெயர் 2000லிருந்தே இருக்கிறது. 2002ஆம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதலில் தனது ஒரு கண்ணை பறிகொடுத்தார். 2006ஆம் ஆண்டு ஹமாஸ் தலைவர்கள் ஒன்றுகூடிய கட்டிடம் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்து தாக்கியது. இதில் மொகமதுவுக்கு கடுமையாக காயம் பட்டது. ஆனாலும் உயிர்பிழைத்துவிட்டார். வேதாளத்தை தோளில் இறங்கவிடாத விக்கிரமாதித்தனாக மொகமதுவை இஸ்ரேல் கொல்லத் துரத்தியது. அடுத்து நடந்த வான்வழி தாக்குதலில் மொகமதுவின் மனைவி இரு பிள்ளைகள் இறந்துபோனார்கள். அதிலும் மொகமதுவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஆம் மீண்டும் உயிர் பிழைத்துவிட்டார்.
இதனால்தான் அவரை கேட் வித் நைன் லிவ்ஸ் என பலரும் பட்டப்பெயரில் அழைக்க காரணமானது. 1950இல் காசாவின் கான் யூனிஸில் பிறந்தவரது இயற்பெயர், மொகமது டையப் இப்ராகிம் அல் மஸ்ரி. இவர் காசாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்தார். இந்த பல்கலைக்கழகத்தை ஹமாஸின் நிறுவனரான ஷேக் அகமது யாசின் என்பவர் நிறுவினார். இவர் புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர் ஆவார். முஜாமா அல் இஸ்லாமியான் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதனை இஸ்ரேலில் அறக்கட்டளை அமைப்பாக கருதினர். மொகமது இந்த அமைப்பின் உறுப்பினராக இருந்தார.். 1978இல் இன்டிபடா போராட்டங்கள் தொடங்கின. அதில் பங்கேற்றவரை இஸ்ரேலிய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதற்கு பிறகு அந்நாட்டின் மீது நடைபெற்ற பல்வேறு தாக்குத ல்களை இவரே திட்டமிட்டார். இதனால் ஹமாஸ் அமைப்பின் தகுதிப்பட்டியலில் வேகமாக முன்னுக்கு வந்தார். 2002இல் இரண்டாவது இன்டிபடா போராட்டத்தின்போது, குவாசம்படைப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது இஸ்ரேலிய ராணுவத்தால் அந்த படைப்பிரிவுத் தலைவர் சலா ஷெகாடே கொல்லப்பட்டிருந்தார். அதுவரை குவாசிம் அமைப்பு வன்முறையை தீவிரமாக கையில் எடுக்கவில்லை. இஷ் அட் தின் அல் குவாசிம் என்பவர், பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர். இவர் 1935இல் கொல்லப்பட்டார். மொகமது இந்த படைப்பிரிவுக்கு வந்து தலைவரான பிறகுதான் இஸ்ரேலில் தற்கொலை தாக்குதல்கள் வேகமெடுத்தன.. இதில் ராணுவ வீரர்களும் மக்களும் கொல்லப்பட்டது உண்மை. இதற்குப்பிறகு இவரை தீவிரமாக பட்டியல் போட்டு கொல்ல அமெரிக்காவும் அதன் ராணுவ கூட்டாளியுமான இஸ்ரேலும் திட்டமிட்டன. இதன் ஒரு பகுதியாக 2014 முதல் 2015ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய பல்வேறு தாக்குதலில் மூளை மொகமதுதான் என அடையாளப்படுத்தியது. அவரை தீவிரவாதி என பகிரங்கமாக கூறியது.
ஹமாஸ் என்ற அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெல்வது என ஒருபுறம் செயல்பட்டாலும் மொகமதுவைப் பொறுத்தவரை அவர் தற்கொலைப்படை தாக்குதல் முதல் தனி ராணுவப்படையை உருவாக்குவது என மாறியிருந்தது. இன்று ஹமாஸ் வைத்திருக்கும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் என அனைத்துமே மொகமதுவின் தலைமையில்தான் உருவாக்கப்பட்டன. இஸ்ரேல் அரசு, அவர் வீல்சேரில்தான் வாழ்கிறார் என பிரசாரம் செய்தாலும் ஹமாஸ் அமைப்பு அவரது உடல்நிலை பற்றி எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அவரை அந்த அமைப்பில் முக்கியமான தலைவராக கருதுவதோடு மக்களிடமும் அவருக்கு மரியாதை உள்ளது. 2014இல் பாலஸ்தீன மக்களுக்கு அமைதி கிடைக்காதவரை இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பாக வாழமுடியாது என ஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுதான் இன்று ஹமாஸ் அமைப்பை இயக்கி வருகிறது.
தி இந்து ஆங்கிலம்
ஸ்டேன்லி ஜானி
கருத்துகள்
கருத்துரையிடுக