குளிரில் சளி பரவுவது எப்படி?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
குளிர்பிரதேசத்திலும் சளி பிடிக்குமா?
நிச்சயமாக. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இது நடக்கும். சளி பிடித்து மூக்கைச் சிந்தி சுவற்றில் துடைத்துவிட்டு நடப்பீர்கள்.
ரினோவைரஸ் இதற்கு காரணம். இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு கால்களில் ஐஸ்கட்டிகளும், சிலருக்கு நீரும் வைக்கப்பட்டது. குளிர்ந்துபோன ஐஸ்கட்டியைக் காலில் வைத்திருந்தவர்களுக்கு சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் 30 சதவீதம் காணப்பட்டது. பிறருக்கு இதைவிட குறைவான வாய்ப்புகள் காணப்பட்டன.
குளிர்ந்த சூழல், உடலில் வெள்ளை அணுக்கள் செயல்படும் வேகத்தை குறைப்பது உண்மை. இதன் விளைவாக, குளிர்ந்த சூழலில் நோய்க்கிருமிகள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. பிறருக்கும் பரவுகிறது. குளிர்ந்த சூழலில், உடலை சூடாக வைப்பதற்கே உடலின் சக்தி செலவாகிறது. எனவே, உடலை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது.
நன்றி: பிபிசி