டைம் - இளம் தலைவர்கள் 2019
இளம் தலைவர்கள் - டைம் பத்திரிகை
ஆண்டுதோறும் டைம் பத்திரிகை அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களை வரிசைப்படுத்தி வருகிறது. அதில் இடம்பெற்ற சிலர்.
பஸிமா அப்துல்ரஹ்மான்
கட்ட டக்கலைஞர், இராக்
அலபாமாவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தாக்குதல் இராக்கில் தொடங்கியது. அமெரிக்க படைகள் உள்ளே வந்து தாக்க இராக்கின் பெரிய நகரான மொசூல் தரைமட்டமானது.
32 வயதில் பஸிமா இராக் திரும்பினார். இதற்குள் கட்டுமானத்துறையில் அவர் பட்டம் பெற்றிருந்தார். நாங்கள் இங்கு கட்டுமானங்களைத் தொடங்கியபோது ஆற்றலும் நீரும் குறைவாக செலவாகும்படி முயற்சித்தோம். கட்டுமானங்களை கட்டி அதனை சோதிக்க எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன.
2017 ஆம் ஆண்டு கேஸ்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இராக்கின் பசுமை கட்டட நிறுவனம் இது. செங்கற்களை விட களிமண்ணைப் பயன்படுத்தி இராக்கின் மரபான கலாச்சார முறையலில் கட்ட டம் கட்டுவதுதான் இவரின் ரகசியம். இராக்கில் மின்வெட்டு, நீர் பற்றாக்குறை ஆகியவற்றோடு மக்கள் வீட்டிற்கு செலவழிக்கவும் தயங்குகிறார்கள். காரணம், உள்நாட்டுப் பிரச்னைதான். எனவே, நாங்கள் வீட்டை மிக குறைந்த ஆற்றல் செலவழிக்கும் விதமாக கட்டித் தந்து வருகிறோம் என்கிறார் நம்பிக்கையாக.
-ரெபெக்கா கோலார்டு இல்லஸ்ட்டிரேஷன் டென்னி ரோகாயு
ரிஸ்கி அஸ்கார் மர்டியானோ
இந்தோனேசியா போராட்டக்காரர்
ரிஸ்கிக்கு 26 வயதுதான். இந்தோனேசியாவின் சுரபாயா எனும் ஏரியாவில் பிறந்து வளர்ந்தவர். இந்த ஏரியாதான் நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் பகுதி. பள்ளிக்கு கல்விக்கட்டணம் கட்ட கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். அங்கு மேல்நிலைப்பள்ளி சென்ற மிகச்சிலரில் ரிஸ்கியும் ஒருவர். படித்த பல்கலையான பிராவ்ஜியாவிலும் மாணவர்களை ஒன்றுதிரட்டி பாலியல் நடத்தைகளுக்கு எதிராக போராடியவர். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் பணிபுரிந்துள்ளார் ரிஸ்கி.
ஐ.நாவின் உதவிகளைப் பெற்று இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரும் முயற்சிகளை செய்து வருகிறார். எங்களுடைய வாழிடத்தில் நிம்மதியாக வாழ்வதே மிக சிரமம். இந்த நிலையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பது எப்படி? என்கிறார் ரிஸ்கி.
2016 ஆம் ஆண்டு யூத் ஃபோர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார் ரிஸ்கி. கிராம புற மாணவர்களின் வறுமை நிலையை மாற்றுவதே திட்டம். பொருளாதார வேறுபாட்டில் இந்தோனேசியா ஆறாவது இடத்தில் இருப்பதை ஆக்ஸ்ஃபேம் அறிக்கையில் காட்டிப் பேசுகிறார். இளைஞர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையோடு பொருளாதார பாதுகாப்பும் தேவை அதற்குத்தான் நாங்கள் உழைத்து வருகிறோம் என்கிறார் .
-லெய்க்நீ பாரான் படம் - டென்னி ரகாயு
நன்றி: டைம் பத்திரிகை